/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி இந்து முன்னணியினர் 40 பேர் கைது

ADDED : நவ 07, 2024 02:45 AM

புதுச்சேரி: கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற, இந்து முன்னணி அமைப்பினர், 40 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி, நெல்லித்தோப்பில் அரசு இடத்தில் இயங்கி வந்த அங்கன்வாடி மையத்தை சில ஆண்டிற்கு முன் சமுதாய நலக்கூடம் கட்டித்தருவதாக கூறி இடிக்கப்பட்டது. அந்த இடத்தில் 3 மாதங்களுக்கு முன் அப்பகுதியை சேர்ந்த சிலர் மாதா சிலையை நிறுவினர்.
மாதா சிலையை அகற்ற வேண்டி குடிசை மாற்று வாரியம் மற்றும் போலீசாருக்கு இந்து முன்னணியினர் மனு அளித்தனர். ஆனால், நடவடிக்கை இல்லை.
இதனைக் கண்டித்து இந்து முன்னணி அமைப்பின் மாநில செயலாளர் மணிவண்ணன் தலைமையில், துணைத்தலைவர் மணி வீரப்பன், நாகராஜ் உள்ளிட்ட, 40க்கும் மேற்பட்டோர் வி.வி.பி., நகர் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின், அங்கிருந்து ஊர்வலமாக சென்று கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.
அவர்களை, பாதுகாப்பு பணியில் இருந்த கோரிமேடு இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார், பேரிகார்டு வைத்து தடுத்து நிறுத்தினர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார், 40 பேரை கைது செய்து, பின், விடுவித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.