ADDED : அக் 14, 2025 06:09 AM
பாகூர் : பாகூர் அடுத்துள்ள சோரியாங்குப்பம் தென்பெண்ணையாற்றில் மணல் திருட்டு நடப்பதாக, புதுச்சேரி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் சென்றுள்ளது.
அதன் பேரி ல், பாகூர் போலீஸ் சிறப்பு உதவி சப் இன்ஸ்பெக்டர் துளசிங்கம் மற்றும் போலீசார் நேற்று காலை சுமார் 9 மணியளவில் சோரியாங்குப்பம் நவாம்மாள் கோவில் பகுதியில் ரோந்து சென்ற போது, 5 பேர் கொண்ட ஒரு கும்பல் தென்பெண்ணையாற்றின் கரையை சேதப்படுத்தி, ஒரு டிராக்டர் பெட்டியில் மணலை ஏற்றிக் கொண்டு இருந்தனர்.
போலீசார் அவர்களை பிடித்த விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் இந்த இடம் தங்களுக்கு சொந்தமான இடம் என்று கூறி உள்ளனர். இதையடுத்து, போலீசார், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் சர்வேயரை வரவழைத்து, மணல் திருட்டு நடந்த பகுதியை சர்வே செய்துள்ளனர்.
அதில், அந்த இடம் தென்பெண்ணையாற்றின் கரை பகுதி, அரசுக்கு சொந்தமான இடம் என்பது உறுதியானது. இதையடுத்து, மணல் திருட்டில் ஈடுபட்ட சோரியாங்குப்பத்தை சேர்ந்த பெருமாள் 55; சீனுவாசன் 59; நாராயணன் 55; முருகையன் 50; ஆறுமுகம் 67; ஆகியோர் மீது வழக்குப் பதிந்து அர்களை கைது செய்து, டிராக்டர் மற்றும் ஒன்றறை யூனிட் மணலுடன் டிப்பர் பெட்டியை போலீசார் பறிமுதல் செய்தனர்.