/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கஞ்சா விற்ற கல்லுாரி மாணவர்கள் 5 பேர் கைது: 4 கிலோ பறிமுதல்
/
கஞ்சா விற்ற கல்லுாரி மாணவர்கள் 5 பேர் கைது: 4 கிலோ பறிமுதல்
கஞ்சா விற்ற கல்லுாரி மாணவர்கள் 5 பேர் கைது: 4 கிலோ பறிமுதல்
கஞ்சா விற்ற கல்லுாரி மாணவர்கள் 5 பேர் கைது: 4 கிலோ பறிமுதல்
ADDED : அக் 01, 2025 11:26 PM
புதுச்சேரி: லாஸ்பேட்டை அருகே கஞ்சா விற்பனை செய்த கல்லுாரி மாணவர்கள் 5 பேரை போலீசார் கைது செய்து, 4 கிலோவை பறிமுதல் செய்தனர்.
லாஸ்பேட்டை, எடையார்பாயைம், தனியார் பள்ளி அருகே கல்லுாரி மாணவர்கள், இளைஞர்களுக்கு சிலர் கஞ்சா விற்பனை செய்து வருவதாக லாஸ்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
அப்போது, அங்கிருந்த 5 பேர் போலீசாரை கண்டவுடன் தப்பி ஓட முயன்றனர். அவர்களை விரட்டி பிடித்த போலீசார், சோதனை செய்தபோது, 4 கிலோ கஞ்சா பொட்டலங்கள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
விசாரணையில், கதிர்காமம், ஆனந்த நகரைச் சேர்ந்த நடராஜன் மகன் அரிஹரன், 21; கவுண்டன்பாளையம், மதர் தெரசா வீதி முருகையன் மகன் சஞ்சய், 19; குடியிருப்புபாளையம், ஜெயம் நகர் அருணாகிரி மகன் சஞ்சய்தத், 20; கருவடிக்குப்பம், பாரதி நகர் வேலு மகன் சந்தானகிருஷ்ணன், 20; ஜெயராம் கார்டன் பகுதியை சேர்ந்த கணேஷ் குமார் மகன் கோடீஸ்வரன் (எ) சரண்நாத், 19; என்பதும், அனைவரும் தனியார் இன்ஜினியரிங் கல்லுாரிகளில் படித்து வருவது தெரிய வந்தது.
இதையடுத்து, அவர்களிடம் இருந்த 4 கிலோ கஞ்சா, 5 மொபைல்கள், ஒரு பைக் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து, 5 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.