/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சி விஜில் பாதுகாப்பு ஒத்திகை 5 பேர் சிக்கினர்
/
சி விஜில் பாதுகாப்பு ஒத்திகை 5 பேர் சிக்கினர்
ADDED : நவ 22, 2024 05:24 AM
புதுச்சேரி: சி விஜில் பாதுகாப்பு ஒத்திகையில், கடல் வழியாக புதுச்சேரிக்கு வந்த 5 பேர் சிக்கினர்.
புதுச்சேரியில் உள்ள 18 மீனவ கிராமங்களில் சி- விஜில் என்ற கடலோர பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நேற்று முன்தினம் துவங்கி, நேற்று மாலை 6:00 மணி வரை நடந்தது.
அதன்படி, டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம், சீனியர் எஸ்.பி., கலைவாணன், ஒதியஞ்சாலை இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் கடலோர காவல்படை போலீசார் படகு மூலம் கடலில் ரோந்து சென்றனர்.
தொடர்ந்து, தலைமை செயலகம், ராஜ்நிவாஸ், சட்டசபை வளாகம், கோர்ட் வளாகம் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகப்படுத்த பட்டிருந்தது.
ஒத்திகை நிகழ்ச்சியின்போது, கடல் வழியாக அனுமதியின்றி புதுச்சேரிக்குள் நுழைந்த 5 பேரை ஓதியஞ்சாலை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.