ADDED : நவ 08, 2025 01:43 AM
புதுச்சேரி: உழவர்கரையை சேர்ந்தவவரை தொடர்பு கொண்ட நபர், ஆன்லைனில் டிரேடிங் செய்தால், அதிக பணம் சம்பாதிக்கலாம் என கூறியதுடன், அது தொடர்பான வாட்ஸ் ஆப் குரூப் ஒன்றிலும், அவரை இணைத்தார். அந்த குரூப்பில் உள்ளவர்கள் தங்களுக்கு அதிக லாப பணம் வருவதாக பதிவிட்டு உள்ளனர்.
இதைநம்பி, ஆன்லைன் டிரேடிங்கில் 4 லட்சத்து 8 ஆயிரம் முதலீடு செய்து, அதன்மூலம்வந்த லாப பணத்தை எடுக்க முயன்றபோது, முடியவில்லை. அதன் பிறகே மோசடி கும்பலிடம் ஏமாந்தது தெரிந்தது.
இதேபோல், அரியாங்குப்பத்தை சேர்ந்தவர் 4 லட்சம், குயவர்பாளையம் நபர் 4 ஆயிரத்து 500, சின்னக்கடை பெண் 90 ஆயிரம், முத்தியால்பேட்டை பெண் 7 ஆயிரத்து 500 என, 5 பேர் 9 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மோசடி கும்பலிடம் ஏமாந்துள்ளனர்.
புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

