/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
5 பேரிடம் ரூ. 2.57 லட்சம் 'அபேஸ்'; சைபர் கிரைம் போலீஸ் விசாரணை
/
5 பேரிடம் ரூ. 2.57 லட்சம் 'அபேஸ்'; சைபர் கிரைம் போலீஸ் விசாரணை
5 பேரிடம் ரூ. 2.57 லட்சம் 'அபேஸ்'; சைபர் கிரைம் போலீஸ் விசாரணை
5 பேரிடம் ரூ. 2.57 லட்சம் 'அபேஸ்'; சைபர் கிரைம் போலீஸ் விசாரணை
ADDED : பிப் 12, 2024 06:30 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் ஐந்து பேரிடம் 2.57 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டது குறித்து, சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரியை சேர்ந்தவர் பிரவீன் என்பவரிடம் மர்ம நபர் ஒருவர் மொபைல் போனில் தொடர்பு கொண்டு, ஆன்லைன் மூலம் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறினார். அதை நம்பி, அவர், 58 ஆயிரம் ரூபாய் செலுத்தி ஏமாந்தார்.
அதேபோல், சடகோபன் என்பவரது மனைவியை மொபைல் போனில் தொடர்பு கொண்ட நபர், ஆன்லைன் மூலம் அதிக சம்பாதிக்கலாம் எனக் கூறினார். அதை நம்பி அவர், 84 ஆயிரம் ரூபாய் அனுப்பி ஏமாந்தார்.அரோக்கிதாஸ் என்பவருக்கு வங்கி அதிகாரி போல பேசி, அவரது ஏ.டி.எம்., கார்டு எண், வங்கி கணக்கு ஆகிய விபரங்களை பெற்று, அவரது வங்கி கணக்கில் இருந்து 25 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் எடுத்தனர்.
அதே போல், நிஜாம்முதீன் என்பவரிடம் பேசிய நபர், மொபைல் எண்ணுக்கு வந்த ஓ.டி.பி., எண்ணை பெற்று, அவரது வங்கி கணக்கில் இருந்து 50 ஆயிரம் ரூபாயை எடுத்தார். கோகுலன் என்பவரின் வங்கி கணக்கில் இருந்து 40 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டுள்ளது.புதுச்சேரியில் 4 பேரிடம், மொத்தம் 2.57 லட்சம் ரூபாய் மோசடி செய்த கும்பலை பற்றி சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.