/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் 5 பேரிடம் ரூ.2.01 லட்சம் 'அபேஸ்'
/
புதுச்சேரியில் 5 பேரிடம் ரூ.2.01 லட்சம் 'அபேஸ்'
ADDED : ஜன 18, 2025 06:48 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் 5 பேரிடம் ரூ.2.01 லட்சம் மோசடி செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
முதலியார்பேட்டையை சேர்ந்தவர் சாய் சித்தார்த். இவரை தொடர்பு கொண்ட நபர், வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் சம்பாதிக்கலாம் என கூறினார். அதை நம்பி, அவர் 1.01 லட்சம் ரூபாயை முதலீடு செய்தார். அந்த நபர் கொடுத்த வேலையை முடித்து, சம்பாதித்த பணத்தை எடுக்க முடியாமல் போனது. பின்தான் அது மோசடி கும்பல் என தெரியவந்தது.
அதே போல, ராஜிவ்காந்தி நகரை சேர்ந்தவர் மாலினி. இவர் 90 ஆயிரம் ரூபாயை முதலீடு செய்து, மர்ம நபரிடம் ஏமாந்தார். பூரணாங்குப்பத்தை சேர்ந்த கார்த்திக்கேயன், ரூ.4 ஆயிரத்து 500, அரும்பார்த்தபுரத்தை சேர்ந்த ராவேந்திரபிரசாத், ரூ.4 ஆயிரத்து 200, முத்திரையர்பாளைத்தை சேர்ந்த சீனிவாசன், ரூ.1 ஆயிரத்து 300 ரூபாய் அனுப்பி ஏமாந்தனர்.
இதுகுறித்து, 5 பேர் கொடுத்த புகார்களின் பேரில், சைபர்கிரைம் போலீசார் வழக்கு பதிந்து, மோசடி செய்யும் கும்பலை தேடி வருகின்றனர்.