/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சைபர் மோசடி கும்பலிடம் பணத்தை இழந்த 5 பேர்
/
சைபர் மோசடி கும்பலிடம் பணத்தை இழந்த 5 பேர்
ADDED : டிச 25, 2024 03:39 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் 5 பேர் ஆன்லைன் மோசடி கும்பலிடம் ரூ. 4. 70 லட்சம் லட்சம் இழந்துள்ளனர்.
புதுச்சேரி, கோவிந்தசாலையை சேர்ந்தவர் ஆயிஷா பீவி. இவரை தொடர்பு கொண்ட நபர், ஆன்லைனில் முதலீடு செய்தால், அதிக பணம் சம்பாதிக்கலாம் என, கூறியுள்ளார்.இதைநம்பி ஆயிஷா பீவி, பல்வேறு தவணைகளாக 2 லட்சத்து 95 ஆயிரத்து 145 ரூபாய் முதலீடு செய்து ஏமாந்தார்.
இதேபோல், பகுதி நேர வேலையாகமர்ம நபர் தெரிவித்த நிறுவனங்களில் லாஸ்பேட்டை பாண்டியன் வீதியை சேர்ந்த எழிலரசி, 1 லட்சத்து 43 ஆயிரம், குயவர்பாயைம் திருமால் நகரைச் சேர்ந்த பாலசந்தர் 10 ஆயிரம் முதலீடு செய்து ஏமாந்தனர்.
கல்மண்டபத்தை சேர்ந்த பிரபாகரன், 16 ஆயிரம், புதுச்சேரி கிருஷ்ணா நகர், 13வது குறுக்கு தெருவை சேர்ந்த பாலாஜி 5 ஆயிரத்து 800 என, 5 பேர் ஆன்லைன் மோசடி கும்பலிடம் 4 லட்சத்து 69 ஆயிரத்து 945 ரூபாய் ஏமாந்துள்ளனர்.இதுகுறித்த புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.