/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் கஞ்சா விற்ற 5 பேர் கைது 5.7 கிலோ கஞ்சா பறிமுதல்
/
புதுச்சேரியில் கஞ்சா விற்ற 5 பேர் கைது 5.7 கிலோ கஞ்சா பறிமுதல்
புதுச்சேரியில் கஞ்சா விற்ற 5 பேர் கைது 5.7 கிலோ கஞ்சா பறிமுதல்
புதுச்சேரியில் கஞ்சா விற்ற 5 பேர் கைது 5.7 கிலோ கஞ்சா பறிமுதல்
ADDED : பிப் 17, 2024 06:33 AM

புதுச்சேரி,: புதுச்சேரியில் கஞ்சா விற்ற 5 பேரை போலீசார் கைது செய்து ரூ. 1 லட்சம் மதிப்புள்ள 5.74 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரி ரயில் நிலையம் அருகில் கஞ்சா விற்பதாக கிடைத்த தகவலின் பேரில், போதை பொருள் தடுப்பு பிரிவு சப் இன்ஸ்பெக்டர் ஜாகீர்உசேன், ஒதியஞ்சாலை சப் இன்ஸ்பெக்டர் பக்தவச்சலம் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் மாலை ரயில் நிலைய பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, சந்தேகிக்கும் வகையில் நின்றிருந்த 5 பேரை பிடித்து சோதனை செய்தனர். அதில், ரூ.1 லட்சம் மதிப்புள்ள 5 கிலோ 740 கிராம் கஞ்சா இருந்ததை கண்டுபிடித்து, பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் பிடிப்பட்டவர்கள் புதுச்சேரி ஜீவா நகர், 3வது குறுக்கு தெரு ஹரீஸ்வரன், 25; முதலியார்பேட்டை ஹவுசிங் போர்டு குடியிருப்பு, தியாகு முதலியார் வீதி அருண்குமார்,25; விழுப்புரம் பழைய செஞ்சி சாலை, பாப்பான்குளம், சல்மான் (எ) ஷாரூ,19; முதலியார்பேட்டை பிராமினாள் வீதி கார்த்திக் சபரி, 25; தர்மாபுரி, பிரசாந்தி நகர் ஷாம் ஜோஷ், 24; என்பது தெரியவந்தது. மேலும், இவர்கள் 2 மாதத்திற்கு முன் விசாகப்பட்டினம் சென்று, அங்கு கஞ்சா விளைவிக்கும் வியாபாரிகளிடம் மொத்தமாக 12 கிலோ கஞ்சாவை வாங்கி வந்து, புதுச்சேரியில் சிறு, சிறு பொட்டலங்களாக மாற்றி விற்று வருவது தெரிய வந்தது.
இதுதொடர்பாக ஒதிஞ்சாலை போலீசார் வழக்கு பதிந்து, ஹரீஸ்வரன் உள்ளிட்ட 5 பேரையும் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சிக்கியது எப்படி
கைது செய்யப்பட்ட 5 பேரும், 2 மாதத்திற்கு முன்பு விசாகப்பட்டினத்தில் கஞ்சா விளையும் நிலத்தில் கஞ்சா செடிகளுடன் எடுத்து கொண்ட புகைப்படங்களை சமூக வலை தளத்தில் பதிவிட்டனர். அதனைக் கொண்டே 5 பேரையும் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.