தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 5 பேரிடம் ரூ.91 ஆயிரம் மோசடி

5 பேரிடம் ரூ.91 ஆயிரம் மோசடி

5 பேரிடம் ரூ.91 ஆயிரம் மோசடி


ADDED : ஏப் 07, 2025 06:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 07, 2025 06:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி; புதுச்சேரி, சின்னக்கடையை சேர்ந்தவர் வசந்த ராஜன். இவரை டெலிகிராம் மூலம் தொடர்பு கொண்ட மர்மநபர் வீட்டி லிருந்தபடியே ஆன் லைனில் முதலீடு செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் என, கூறியுள்ளார்.

இதை நம்பி வசந்தராஜன், மர்மநபர் தெரிவித்த 49 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்து, அவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளை முடித்துள்ளார்.

பின், அதன் மூலம் லாபப் பணத்தை எடுக்க முயன்றபோது முடியவில்லை. அதன் பிறகே, மோசடி கும்பலிடம் பணத்தை இழந்தது தெரியவந்தது.

நெட்டப்பாக்கத்தை சேர்ந்தவர் ஹரிகரன், வங்கி கணக்கில் இருந்து 20 ஆயிரம் ரூபாயை அவரது அனுமதியின்றி மர்மநபர்கள் எடுத்துள்ளனர்.

இதேபோல், மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சந்தோஷ் 10 ஆயிரம், வில்லியனுாரை சேர்ந்த பத்மநாதன் 4 ஆயிரத்து, 600, திப்புராயபேட்டையை சேர்ந்த செழியன் 7 ஆயிரத்து 500 என, 5 பேர் மோசடி கும்பலிடம் 91 ஆயிரத்து 100 ரூபாய் ஏமாந்துள்ளனர். புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us