/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வக்கீல் வீட்டில் 5 சவரன் திருட்டு
/
வக்கீல் வீட்டில் 5 சவரன் திருட்டு
ADDED : அக் 03, 2025 01:35 AM
அரியாங்குப்பம்: வழக்கறிஞர் வீட்டில் 5 சவரன் நகைகளை திருடி சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
அரியாங்குப்பம் - வீராம்பட்டினம் சாலை, காக்கையாந்தோப்பை சேர்ந்தவர் அரவிந்த், 44; வழக்கறிஞர். நெய்வேலியில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு நேற்று முன்தினம் காலை குடும்பத்துடன்சென்றார். இரவு வீடு திரும்பினார்.
அறையில் இருந்த பீரோவில் சாவி தொங்கிய நிலையில் இருந்தது. லாக்கரில் இருந்த, 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 5 சவரன் நகைகள், 2 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்கம் காணாமல் போயிருந்தது. பல இடங்களில் தேடியும் நகைகள் கிடைக்கவில்லை.
இதுகுறித்து, அவர் அளித்த புகாரின் பேரில், அரியாங்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து, நகைகளை திருடிய நபர்களை தேடி வருகின்றனர்.