/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
51 வகை மரபு நெல் விதைகள் வழங்கும் நிகழ்ச்சி
/
51 வகை மரபு நெல் விதைகள் வழங்கும் நிகழ்ச்சி
ADDED : ஆக 19, 2025 07:52 AM

புதுச்சேரி : புதுச்சேரி தமிழ்ச் சங்க வளாகத்தில், டில்லியில் நடக்கும் கண்காட்சியில், காட்சிப்படுத்த கலாம் விதைகளின் விருட்சம் சமூக இயக்கம் சார்பில் 51 வகை மரபு நெல் விதைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, சங்கத்தின் தலைவர் முத்து தலைமை தாங்கினார். கலாம் விதைகளின் விருட்சம் சமூக இயக்கத்தின் நிறுவனர் ராஜா, ரேகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில்,
கலாம் விதைகளின் விருட்சம் சமூக இயக்கம் கடந்த 4 ஆண்டுகளாக சேகரித்த 51 வகை மரபு நெல் விதைகள், டில்லி கண்காட்சியில் காட்சிப்படுத்ததமிழ்நாடு, புதுச்சேரி நம்மாழ்வார் இயற்கை உழவர்கள் சங்கம், நெல் ஜெயராமன் இயற்கை பல பயிர் சாகுபடியாளர்கள் சங்கத்தின் ஒருங்கிணைந்த தலைவர் ராஜ வேணுகோபாலிடம் இலவசமாக வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், கலாம் சமூக இலக்கியம் மற்றும் இயற்கைப் பாதுகாப்பு அமைப்பு நிறுவனர் இளங்கோவன், முப்படை முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் வீரத் தாய்மார்கள் நலச் சங்கத்தின் நிறுவனர் மோகன், முன்னாள் தலைமை ஆசிரியை வாசுகி ராமமூர்த்தி ஆகியோர் மரபு நெல் விதைகள் குறித்து விளக்கம் அளித்தனர்.
பொத்திக் நிறுவனர் பரமேஸ்வரி வரவேற்றார். மாணவர் தனுஷ் நன்றி கூறினார்.
நிகழ்ச்சியில் விவசாயிகள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.