/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சப் இன்ஸ்பெக்டர் பணி 7 நாட்களில் 543 பேர் தேர்ச்சி
/
சப் இன்ஸ்பெக்டர் பணி 7 நாட்களில் 543 பேர் தேர்ச்சி
சப் இன்ஸ்பெக்டர் பணி 7 நாட்களில் 543 பேர் தேர்ச்சி
சப் இன்ஸ்பெக்டர் பணி 7 நாட்களில் 543 பேர் தேர்ச்சி
ADDED : ஜன 28, 2026 05:12 AM
புதுச்சேரி: சப் இன்ஸ்பெக்டர் பணிக்கு 7ம் நாள் உடற்தகுதி தேர்வில் 234 பேர் மட்டுமே பங்கேற்றனர்.
போலீஸ் துறையில் காலியாக உள்ள 70 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்ப, ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அதில் 16 ஆயிரத்து 481 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆண்கள் பிரிவில் 12 ஆயிரத்து 378 நபர்களுக்கான உடல் தகுதி தேர்வு கோரிமேடு ஆயுதப்படை பயிற்சி மைதானத்தில் கடந்த 19ம் தேதி துவங்கி நடந்து வருகிறது.
இந்நிலையில், முதல் 6 நாட்களில் 421 பேர் தேர்வாகினர். இதையடுத்து 7ம் நாளான நேற்று ஆயிரம் பேர் அழைக்கப்பட்டனர். 343 பேர் பங்கேற்றனர். அதில் 122 பேர் தேர்வாகினர். இதுவரை 7 நாட்களில் மொத்தம் 543 பேர் மட்டுமே தேர்வாகி அடுத்த மாதம் நடக்கவுள்ள எழுத்து தேர்வுக்கு தகுதி பெற்றனர். அதனை தொடர்ந்து ௮ம் நாளான இன்று ஆயிரம் பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.

