விசா முடிந்து புதுச்சேரியில் தங்கியிருந்த ஆப்பிரிக்காவை சேர்ந்த 6 பேர் கைது
விசா முடிந்து புதுச்சேரியில் தங்கியிருந்த ஆப்பிரிக்காவை சேர்ந்த 6 பேர் கைது
ADDED : மார் 21, 2026 04:44 AM
புதுச்சேரி: விசா முடிந்தும் சட்ட விரோதமாக தங்கியிருந்த ஆப்பிரிக்காவை சேர்ந்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி, கோரிமேடு சஞ்சீவி நகர் தனியார் விடுதியில் விசா முடிந்தும் அவர்களது நாட்டிற்கு செல்லாமல் 6 பேர் தங்கியிருப்பதாக, புதுச்சேரி குடியேற்ற பணியகம் (இமிக்கிரேஷன்) மண்டல பதிவு அலுவலர் ராமச்சந்திரன் டி.நகர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் விடுதியில் தங்கியிருந்த 6 பேரிடம் விசாரணை நடத்தினர்.
அதில், ஆப்பிரிக்கா நாட்டை சேர்ந்த ஒருவர் புதுச்சேரியில் தங்கி படித்து வருகிறார். இவரது உறவினர்கள் 6 பேர் அவரை பார்க்க வந்ததும், விசா முடிந்தும் அவர்கள் தனது நாட்டிற்கு செல்லாமல், கடந்த 8 ஆண்டுகளாக புதுச்சேரியில் தங்கியிருந்தது தெரியவந்தது.
போலீசார் விசாரணையில், ஆப்பிரிக்கா, உகாண்டாவை சேர்ந்த மஸ்துலா பார்பி கான்சீம், ககாய் ஷாடியா, தான்சானியாவை பகுதியை சேர்ந்த டெல்வின் ஐஸ்டின் தாரிமோ, காட்வின் ஆண்டனி சுக்வு, பேபியன் சபினா பால், களங்கு மரியம் இசா ஆகியோர் என்பது தெரியவந்தது.
]அவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்து, 6 பேரை கைது செய்து, நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
