/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாவட்ட நுகர்வோர் குறை தீர்வு ஆணையத்தில் 6 வழக்குகளுக்கு தீர்வு
/
மாவட்ட நுகர்வோர் குறை தீர்வு ஆணையத்தில் 6 வழக்குகளுக்கு தீர்வு
மாவட்ட நுகர்வோர் குறை தீர்வு ஆணையத்தில் 6 வழக்குகளுக்கு தீர்வு
மாவட்ட நுகர்வோர் குறை தீர்வு ஆணையத்தில் 6 வழக்குகளுக்கு தீர்வு
ADDED : செப் 30, 2025 06:35 AM

புதுச்சேரி :புதுச்சேரி மாவட்ட நுகர் வோர் குறை தீர்வு ஆணையத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில், 6 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ஒரு லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் முறையீட்டாளர்களுக்கு வழங்கப்பட்டது.
புதுச்சேரி மாவட்ட நுகர் வோர் குறை தீர்வு ஆணையத்தில், ''கிரகக் மத்யஸ்ததா சமாதன்'' அதாவது நடுநிலையாளர் முலம் நுகர்வோர் தீர்ப்புகள் (மக்கள் நீதிமன்றம்) நடந்தது.
மாவட்ட நுகர்வோர் ஆணைய தலைவர் முத்து வேல் தலைமையில், உறுப்பினர்கள் சுவிதா ஆறுமுகம் ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்குகளின் மீது விசாரணை நடத்தியது.
இதில், மாவட்ட நுகர்வோர் குறை தீர்வு ஆணையத்திலிருந்து 14 வழக்குகள் சமாதானத்திற்கானது என கண்டறியப்பட்டு, அவ்வழக்குகளில் பேச்சு வார்த்தைக்கு உட்படுத்தப்பட்டது.
இதில், 6 வழக்குகளில் உடன்படிக்கை ஏற்பட்டு தீர்வு காணப்பட்டது. புதுச்சேரி நீதித்துறை சிறப்பு அதிகாரி நீதிபதி ரமேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயனாளிகளுக்கு உத்தரவு நகல்கள் மற்றும் காசோலைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் தலைவர் ரமேஷ், பொது செயலர் நாராயணக்குமார், பொருளாளர் ராஜபிரகாஷ் மற்றும் வழக்கறிஞர்கள் ராஜேந்திரன், இளையராஜா, சரவணன், மோகனம், செல்வக்குமார், கார்த்திக், செல்லப்பன், ஐயப்பன் அலெக்கிஸ்மேரி, புதுச்சேரி சட்டக்கல்லூரி மாணவர்கள், வழக்காடிகள், காப்பீட்டு நிறுவனம், பொதுத்துறை வங்கி அதிகாரிகள் மற்றும் தனியார் நிறுவன நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த மக்கள் நீதிமன்றம் மூலம் ஒரு லட்சத்து 53 ஆயிரம் ரூபாய், முறையீட்டாளர்களுக்கு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, நுகர்வோர் குறை தீர்வு ஆணைய பதிவாளர் விஜயா ரவிந்திரன் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.