6 காமராஜ் நகர் தொகுதியில் காங்., வேட்பாளர் ஓட்டு சேகரிப்பு
6 காமராஜ் நகர் தொகுதியில் காங்., வேட்பாளர் ஓட்டு சேகரிப்பு
ADDED : மார் 28, 2026 08:25 PM

புதுச்சேரி:காமராஜ் நகர் தொகுதி காங்., வேட்பாளர் தேவதாஸ், அகில இந்திய செயலாருடன் லெனின் நகர், கிருஷ்ணா நகரில் 'கை' சின்னத்திற்கு தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.
புதுச்சேரி சட்டசபை தேர்தலில் காமராஜ் நகர் தொகுதியில் போட்டியிடும் காங்., வேட்பாளர் தேவதாஸ், மாநில தலைவர் வைத்திலிங்கம் ஆதரவுடன் லெனின் நகர், கிருஷ்ணா நகர், சாமிப்பிள்ளை தோட்டம் பகுதிகளில் நேற்று வீடு, வீடாக சென்று ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அதில், அகில இந்திய காங்., செயலாளர் அஞ்சலி நிம்பல்கர், வேட்பாளர் தேவதாசை ஆதரித்து ஓட்டு சேகரித்தார்.
வேட்பாளரை மேளதாளம் முழங்க வரவேற்ற அப்பகுதி மக்கள், தேவதாஸ் எம்.எல்.ஏ.,வாக இல்லாவிட்டாலும், கடந்த 4 ஆண்டாக இடைவிடாமல் மக்களுக்கு சேவை செய்து வருவதாகவும், இரவு பகலாக உழைத்து, தொகுதி மக்களின் குறைகளை தீர்த்து வரும் அவரது பண்பும், , செயல்பாடும் பாராட்டுக்குரியது என்றனர்.
இதனால், லெனின் நகர், கிருஷ்ணா நகர் மற்றும் சாமிபிள்ளை தோட்டம் பகுதிகளில் காங்., கட்சிக்கு அதிகரித்து வரும் மக்கள் ஆதரவு, தேர்தலில் வெற்றியை உறுதி செய்துள்ளதாக கட்சியினர் தெரிவித்தனர்.
