sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 04, 2026 ,மாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 பாடத்திட்டத்தில் இந்திய அறிவு முறை புதுச்சேரி பல்கலையில் 6 நாள் பயிற்சி

/

 பாடத்திட்டத்தில் இந்திய அறிவு முறை புதுச்சேரி பல்கலையில் 6 நாள் பயிற்சி

 பாடத்திட்டத்தில் இந்திய அறிவு முறை புதுச்சேரி பல்கலையில் 6 நாள் பயிற்சி

 பாடத்திட்டத்தில் இந்திய அறிவு முறை புதுச்சேரி பல்கலையில் 6 நாள் பயிற்சி


ADDED : மார் 04, 2026 04:49 AM

Google News

ADDED : மார் 04, 2026 04:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: மத்திய கல்வி அமைச்சகம் மற்றும் யு.ஜி.சி., மாளவியா மிஷன் ஆசிரியர் பயிற்சி மையம் சார்பில் உயர்கல்வி பாடத்திட்டங்களில் இந்திய அறிவு முறைகளை புகுத்துவது குறித்த 6 நாள் தேசிய அளவிலான பயிற்சிப் பட்டறை புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நடந்தது.

கடந்த 23ம் தேதி துவங்கிய பயிற்சியில், நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த பேராசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் பங்கேற்றனர்.​ புதிய கல்விக்கொள்கை இலக்கு, மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை தொலைநோக்குப் பார்வையின்படி, இந்திய பாரம்பரிய ஆயுர்வேதம், அர்த்தசாஸ்திரம், நீதி சாஸ்திரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை நவீன பாடத்திட்டங்களுடன் இணைப்பதே இந்தப் பயிற்சியின் முக்கிய நோக்கமாகும்.

இதற்காக யு.ஜி.சி., அங்கீகாரம் பெற்ற முதன்மைப் பயிற்சியாளர்கள் பேராசிரியர்களுக்குப் பயிற்சி அளித்தனர்.​

நிறைவு விழாவில் புதுச்சேரி பல்கலைக்கழகத் துணை வேந்தர் பிரகாஷ் பாபு தலைமை தாங்கினார். ஐ.ஐ.டி., காரக்பூர் பேராசிரியர் அனுராதா சவுத்ரி, மாளவியா மிஷன் ஆசிரியர் பயிற்சி மைய (பொ) இயக்குநர் அருள் ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார், ​தேசிய சமஸ்கிருதப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த யு.ஜி.எஸ்., கண்காணிப்பாளர் கனபால குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

உதவிப் பேராசிரியர் ஸ்ருஜனா நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us