ADDED : செப் 13, 2026 11:52 PM
புதுச்சேரி: புதுச்சேரி–விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் கார் கட்டுப்பாட்டை இழந்து எதிரில் பைக்கில் வந்தவர்களை மோதிவிட்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் நேற்று மாலை 5:00 மணியளவில் பெண் ஒருவர், புதுச்சேரி-விழுப்புரம் சாலையில் கார் ஓட்டி சென்றார். அப்போது கார், பவழக்காரன்சாவடி பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த 3 ஸ்கூட்டர் மற்றும் 2 பைக் மீது அடுத்தடுத்து பயங்கரமாக மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதனால் ஸ்கூட்டர் மற்றும் பைக்கில் வந்த 2 குழந்தை, 2 பெண்கள் உள்பட, 6 பேர் படுகாயம் அடைந்தனர். அங்கிருந்தவர்கள் 6 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வடக்கு போக்குவர்த்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
