6 வில்லியனுார் வெள்ளாளர் வீதியில் என்.ஆர்.காங்., ரவிக்குமார் ஓட்டு சேகரிப்பு
6 வில்லியனுார் வெள்ளாளர் வீதியில் என்.ஆர்.காங்., ரவிக்குமார் ஓட்டு சேகரிப்பு
ADDED : மார் 29, 2026 07:26 PM

வில்லியனுார்: வில்லியனுார் தொகுதி வெள்ளாளர் வீதி, மேட்டுத் தெரு, கொம்பாக்கம் ஏரிக்கரை ஊத்துக்காட்டு மாரியம்மன் கோவில் தெரு, குப்பம்பேட் உள்ளிட்ட பகுதியில் என்.ஆர்.காங்., வேட்பாளர் ரவிக்குமார் கூட்டணி கட்சியினருடன், வீடு வீடாக சென்று ஜக்கு சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார். அப்போது பெண்கள் மலர் துாவியும் மற்றும் ஆரத்தி எடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது காங்., உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து 100க்கும் மேற்பட்டோர் விலகி, வேட்பாளர் ரவிக்குமார் முன்னிலையில் என்.ஆர்.காங்., கட்சியில் இணைந்து ஆதரவு தெரிவித்தனர்.
அப்போது புதுச்சேரி என்.ஆர்.காங்., முதல்வர் ரங்கசாமி ஆட்சியில் அரசு பள்ளியில் படிக்கும் ஏழை எளிய மாணவர்களும் இடஒதுக்கீடு வழங்கி டாக்டர்களாகவும், இன்ஜினியர்களாகவும் படிப்பதற்கு வழிவகை செய்துள்ளார். நல்ல படித்த திறமையானவர்களுக்கு நேர்மையான முறையில் தாசில்தார், அசிஸ்டென்ட், போலீஸ், ஆசிரியர்கள் என பல்வேறு துறைகளில் அரசு வேலைவாய்ப்பு வழங்கிய ரங்கசாமி, மீண்டும் முதல்வராக எனக்கு ஜக்கு சின்னத்திற்கு ஓட்டு போடுமாறு கேட்டுக்கொண்டார். வாக்கு சேகரிப்பில் தேசிய ஜனநாயக கூட்டணி அ.தி.மு.க., பா.ஜ., உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
