/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
6 பி.சி.எஸ்., அதிகாரிகளுக்கு பதவி உயர்வு
/
6 பி.சி.எஸ்., அதிகாரிகளுக்கு பதவி உயர்வு
ADDED : நவ 12, 2024 07:15 AM
புதுச்சேரி: பல்வேறு துறைகளில் பணியாற்றும் ஆறு பி.சி.எஸ்., அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி அரசில் 16 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மட்டுமின்றி, 81 பி.சி.எஸ்., அதிகாரிகள் உள்ளனர். இது தவிர 19 அதிகாரிகள் பொறுப்பு அடிப்படையில் பி.சி.எஸ்., பணிகளை கவனித்து வருகின்றனர். பி.சி.எஸ்., அதிகாரிகளை பொருத்தவரை என்ட்ரி கிரேடு, செலக் ஷன் கிரேடு, ஜூனியர் அட்மினிஸ்ட்ரேடிவ் கிரேடு, நான்-பங்ஷனல் கிரேடு பதவிகள் உள்ளன.
இதில் செலக்ஷன் கிரேடில் பணிகளை கவனித்து வரும் பி.சி.எஸ்., அதிகாரிகளான எழுது பொருள் அச்சு துறை சார்பு செயலர் சுதாகர், ஐ.டி., துறை இயக்குனர் சிவராஜ் மீனா, உயர் கல்வி துறை இயக்குனர் அமன் சர்மா, துணை தலைமை தேர்தல் அதிகாரி ஆதர்ஷ் ஆகியோர் நோஷனல் அடிப்படையில் முன் தேதியிட்டு பதவி அளிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் சார்பு செயலர் பதவி வகிக்கும் நான்கு பி.சி.எஸ்., அதிகாரிகள், துணை செயலர் பதவி உயர்வினை பெறுகின்றனர். இதேபோல், சீனியர் பி.சி.எஸ்., அதிகாரிகளான தொழில் துறை இயக்குனர் ருத்ரகவுடு, போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் ஆகியோருக்கும் முன் தேதியிட்டு நோஷனல் அடிப்படையில் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், இணை செயலர் பதவியில் இருந்த இவரும், கூடுதல் அரசு செயலர் பதவி உயர்வினை பெறுகின்றனர். இதற்கான அறிவிப்பினை கவர்னர் கைலாஷ்நாதன் உத்தரவின்பேரில், நிர்வாக சீர்திருத்த துறை சார்பு செயலர் ஜெய்சங்கர் பிறப்பித்துள்ளார்.