/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஒரே நாளில் 6 பேரிடம் ரூ. 11.51 லட்சம் 'அபேஸ்'
/
ஒரே நாளில் 6 பேரிடம் ரூ. 11.51 லட்சம் 'அபேஸ்'
ADDED : செப் 23, 2024 05:49 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 6 பேரிடம் 11.51 லட்சம் ரூபாய் அபகரித்த மோசடி கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி, மூலக்குளம் ராதாகிருஷ்ணன் நகர், 7வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் சுவாமிநாதன். அவரை தொடர்பு கொண்ட மர்ம நபர், ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறியதை நம்பி, ரூ. 4.35 லட்சம் முதலீடு செய்து ஏமாந்தார்.
மூலக்குளம் திருமலை தயார் நகரைச் சேர்ந்தவர் ராஜ்குமார் என்பவரை தொடர்பு கொண்ட மர்ம நபர் ஆன்லைன் மூலம் பங்கு சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என கூறியுள்ளார். இதை நம்பி ரூ. 6 லட்சம் முதலீடு செய்து ஏமாந்தார். சொக்கநாதன்பேட், தட்சிணாமூர்த்தி நகரைச் சேர்ந்த சம்பத் என்பவரை தொடர்பு கொண்ட மர்ம நபர், விழாக்கால சலுகையில் ஆன்லைனில் டி.வி., மற்றும் உதிரி பாகங்கள் குறைந்த விலைக்கு கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறினார்.
இதை நம்பி சம்பத் பல்வேறு தவணையாக ரூ. 73,500 பணம் செலுத்தி ஏமாந்தார். இதுபோல் நேற்று முன்தினம் ஒரே நாளில் 6 பேரிடம், 11.51 லட்சம் ரூபாயை சைபர் கிரைம் மோசடி கும்பல் அபகரித்துள்ளது. இது புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து, மோசடி கும்பலை தேடி வருகின்றனர்.