/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பெண் உட்பட 6 பேரிடம் ரூ. 3.45 லட்சம் மோசடி
/
பெண் உட்பட 6 பேரிடம் ரூ. 3.45 லட்சம் மோசடி
ADDED : செப் 18, 2024 10:02 PM
புதுச்சேரி: புதுச்சேரியில், பெண் உட்பட 6 பேரிடம் 3.45 லட்சம் மோசடி செய்த மர்ம கும்பலை சைபர் கிரைம் போலீசார் தேடிவருகின்றனர்.
புதுச்சேரி ஒயிட் டவுன் பகுதியை சேர்ந்தவர் அஸ்வினி,இவரை தொடர்பு கொண்ட நபர், வீட்டில் இருந்தபடியே பகுதி நேரத்தில், ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என கூறினார். அதை நம்பி, அவர் 2.04 லட்சம் ரூபாய் அனுப்பினார். அந்த நபர் கொடுக்கப்பட்ட வேலையை செய்து முடித்தார். அதில், சம்பாதித்த பணத்தை அவரால் எடுக்க முடியாமல் மர்ம கும்பலிடம் ஏமாந்தது தெரியவந்தது.
அதே போல, திருபுனை பகுதியை சேர்ந்தவர் மோனிகா, இவரை தொடர்பு கொண்ட நபர், வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் சம்பாதிக்கலாம் என கூறியதை அடுத்து, அவர் 24 ஆயிரம் ரூபாய் அனுப்பி மர்ம நபரிடம் ஏமாந்தார்.
தொடர்ந்து, தன்வந்திரி நகரை சேர்ந்தவர் ராஜ்குமார், அயோத்தியில் தங்குவதற்கு, ஆன்லைன் மூலம் விடுதியை தேடி அதில் ஒரு நபரிடம் பேசி ,விடுதி அறையை புக் செய்து, கொடுக்க ராஜ்குமார் 49 ஆயிரம் ரூபாய் அனுப்பி அந்த மர்ம நபரிடம் ஏமாந்தார்.
மேலும், லாஸ்பேட்டையை சேர்ந்த அஷிக், இவரிடம் வங்கி அதிகாரி பேசுவதாக கூறி முதலில் அறிமுகம் செய்துகொண்டு கிரெடிட் கார்டு தொகையை உயர்த்துவதற்கு, வங்கி, விபரங்கள் ஓ.டி.பி., எண் ஆகியவற்றை அனுப்பினார். இந்நிலையில், அவரது வங்கி கணக்கில் இருந்து, 45 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டது.
தொடர்ந்து, பிள்ளைச்சாவடியை சேர்ந்த சேரன், 10 ஆயிரம் ரூபாய், முதலியார்பேட்டை பகுதியை சேர்ந்த ராஜிவ்காந்தி 13 ஆயிரம் ரூபாய் மர்ம நபரிடம் அனுப்பி ஏமாந்துள்ளனர்.
இதுகுறித்து, 6 பேர் நேற்று கொடுத்த புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம கும்பலை தேடிவருகின்றனர்.