/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சென்னை கல்லுாரி மாணவர் கொலை வழக்கு ரெஸ்டோ பார் உரிமையாளர் உட்பட 6 பேர் கைது
/
சென்னை கல்லுாரி மாணவர் கொலை வழக்கு ரெஸ்டோ பார் உரிமையாளர் உட்பட 6 பேர் கைது
சென்னை கல்லுாரி மாணவர் கொலை வழக்கு ரெஸ்டோ பார் உரிமையாளர் உட்பட 6 பேர் கைது
சென்னை கல்லுாரி மாணவர் கொலை வழக்கு ரெஸ்டோ பார் உரிமையாளர் உட்பட 6 பேர் கைது
ADDED : ஆக 12, 2025 01:44 AM

புதுச்சேரி: புதுச்சேரி ரெஸ்டோ பாரில் சென்னை கல்லுாரி மாணவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், பார் உரிமையாளர் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை, எஸ்.ஆர்.எம்., கல்லுாரி மாணவர் ஷாஜன், தனது பிறந்த நாள் விழாவை கடந்த 9ம் தேதி இரவு புதுச்சேரி, மிஷன் வீதியில் உள்ள ஓ.எம்.ஜி., ரெஸ்டோ பாரில் கொண்டாடினார். அப்போது, ஏற்பட்ட தகராறில், ஷாஜனின் நண்பரான சிவகங்கையை சேர்ந்த மோஷிக் சண்முகபிரியன்,22; பார் ஊழியரால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். படுகாயமடைந்த ஷாஜன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் குறித்து ஷாஜனின் நண்பரான, கும்பகோணத்தை சேர்ந்த தேவநேசன், பெரியக்கடை போலீசில் அளித்த புகாரில், கடந்த 9ம் தேதி மதியம், ஷாஜன் தனது பிறந்த நாள் விழா கொண்டாட்டத்திற்கு நண்பர்களுடன் வருமாறு அழைத்தார். அதன்பேரில், அன்று நள்ளிரவு 1:30 மணிக்கு, எனது நண்பர்களுடன் ் புதுச்சேரி, மிஷன் வீதியில் ஓ.எம்.ஜி., ரெஸ்டோ பாருக்கு வந்தோம். பார் ஊழியர்கள் நேரமாகிவிட்டதாக கூறி, எங்களை அனுமதிக்கவில்லை. ஷாஜன் வந்து, நாங்கள் சாப்பிட மற்றும் நடமாட அனுமதி வாங்கி அழைத்து சென்றார்.
நாங்கள் பார், முதல் மாடிக்கு சென்றபோது, பவுன்சர்கள் அங்கிருந்த பெண் வாடிக்கையாளர்களையும், எங்களையும் வெளியே போக கூறினர். இதுகுறித்து ஷாஜனிடம் கேட்டபோது, தன்னுடன் வந்த நண்பர்கள் மது அருந்திவிட்டு நடனம் ஆடியபோது, பெண்கள் மீது கை பட்டதால் பிரச்னையானதால், வெளியே போக சொல்கிறார்கள் என்றார்.
இதற்கிடையே, ஊழியர் ஒருவர் பில் தொகையை செலுத்த அழைத்ததின் பேரில் ஷாஜன், மோஷிக் சண்முகபிரியன் இருவரும் மறுபடியும் பார் உள்ளே சென்றனர். அங்கு, மீண்டும் தகராறு நடக்கும் சத்தம் கேட்கவே, நாங்கள் உள்ளே செல்ல முயன்றபோது, ஷாஜன், மோஷிக் சண்முகபிரியன் ஆகிய இருவரையும், பார் ஊழியர்கள் குப்பை தொட்டி, கத்தி, பீர் பாட்டில் தாக்கி, படிக்கட்டில் தள்ளினர்.
அதில், படுகாயமடைந்த இருவரையும் காரில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது, மோஷிக் சண்முகபிரியன் இறந்து விட்டதாக டாக்டர் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.
அதன்பேரில், பெரியக்கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், சப் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து, ரெஸ்டோ பார் உரிமையாளர் முத்தியால்பேட்டை ராஜ்குமார்,31; பார் ஊழியர் வில்லியனுார் அசோக்ராஜ்,26; பவுன்சர்கள் டி.வி.நகர் பூபதி (எ) டேவிட்,22; வாழைக்குளம் சஞ்சய்குமார்,21; கடலுார் அரவிந்த்,29; விழுப்புரம், புகழேந்தி,28; ஆகியோரை கைது செய்தனர்.
மேலும், இவர்கள் கொலைக்கு பயன்படுத்திய கத்தி, தடி மற்றும் பீசா பேன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து கைது செய்யப்பட்ட 6 பேரையும் நேற்று இரவு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும், 5 பேரை தனிப்படை போலீசார் தேடிவருகின்றனர்.

