ADDED : ஜூலை 25, 2026 05:24 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரியில் நள்ளிரவில் அதிவேகமாக வந்த கார் ஒன்று 5 பைக்குகள் மீது மோதி விபத்து ஏற்படுத்தியதில் 6 பேர் படுகாயமடைந்தனர்.
புதுச்சேரி, திருவள்ளுவர் சாலையில் இருந்து பாலாஜி தியேட்டர் வழியாக நேற்று நள்ளிரவு 12:00 மணியளவில் ஒரு கார் அதிவேகமாக வந்தது. அந்த கார் கட்டுப்பாட்டை இழந்து உப்பனாறு வாய்கால் அருகே சென்ற 5 பைக்குகள் மீது அடுத்தடுத்து மோதி நிற்காமல் சென்றது. இதனால் பைக்கில் சென்ற ஆறு பேர் பலத்த காயமடைந்தனர்.
இவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு, அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த விபத்தில் பைக்கில் சென்ற 5 வயது சிறுவன் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார். இந்த விபத்து குறித்து போக்குவரத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
