ADDED : செப் 21, 2024 06:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்: தவளக்குப்பம், சடா நகரை சேர்ந்தவர் கோபி, 21. இவரது நண்பர்களான பலராமன், 22; சண்முகம், 21 ஆகியோருடன் தவளக்குப்பம் பாரில் நேற்று முன்தினம் மது குடித்தனர்.
அதே பாரில், அபிேஷகப்பாக்கம் பகுதியை சேர்ந்த பூந்தமிழன்,24; மணிகண்டன்,23; பிரதீப்,22; இமயவரம்பன், 21; ஆகியோர் மது குடித்தனர்.
இரு தரப்பிற்கும் இடையே தகராறு ஏற்பட்டு தாக்கி கொண்டனர்.
இரு தரப்பும் கொடுத்த புகார்களின் பேரில், தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து, 6 பேரை போலீசார் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி, சிறையில் அடைத்தனர்.