/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
எஸ்.ஐ., பணிக்கான தேர்வு 3 நாட்களில் 65 பேர் தகுதி
/
எஸ்.ஐ., பணிக்கான தேர்வு 3 நாட்களில் 65 பேர் தகுதி
எஸ்.ஐ., பணிக்கான தேர்வு 3 நாட்களில் 65 பேர் தகுதி
எஸ்.ஐ., பணிக்கான தேர்வு 3 நாட்களில் 65 பேர் தகுதி
ADDED : பிப் 07, 2026 02:40 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் போலீஸ் துறையில் காலியாக உள்ள 70 சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப, ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அதில் 16 ஆயிரத்து 481 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன.
கோரிமேடு ஆயுதப்படை பயிற்சி மைதானத்தில் ஆண்கள் பிரிவுக்கான உடல் தகுதி தேர்வு நடந்து முடிந்தது. அதில் 1,244 பேர் தேர்வாகினர்.
இதையடுத்து, பெண்கள் பிரிவுக்கான உடற்தகுதி தேர்வு கடந்த 4ம் தேதி துவங்கியது. முதல் 2 நாட்களில் 48 பேர் தேர்வாகினர். நேற்று 3ம் நாள் ஆயிரம் பேர் அழைக்கப்பட்டதில், 293 பேர் பங்கேற்றனர். 17 பேர் மட்டுமே தேர்வாகினர். இன்று 7ம் தேதி கடைசி நாள் 1,325 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.