ADDED : மார் 20, 2026 07:36 AM
அ நிறம் | அளவு
பாகூர்: பாகூர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு திடீரென இடியுடன் கன மழை கொட்டி தீர்த்தது.
புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. ஆனால், நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் பனிப்பொழிவும் அதிகமாக இருந்து வந்தது. தற்போது, பனிப்பொழிவு குறைந்துள்ள நிலையில், நேற்று முன்தினம் இரவு சுமார் 1:00 மணி அளவில், பாகூர், சேலியமேடு, கிருமாம்பாக்கம், குருவிநத்தம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் திடீரென இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
இதனால், பாகூர் பகுதியில் உள்ள கிராமங்களில் 4 மணி நேரம் வரை மின் தடை ஏற்பட்டது.இரவு துவங்கி நேற்று அதிகாலை வரையில் 6.7 செ.மீ., மழை பாகூரில் பதிவானது. திடீர் மழையால் உஷ்ணம் தணிந்து பொது மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
