7. நெல்லித்தோப்பு தொகுதியில் ல.ஜ.க., வேட்பாளரை ஆதரித்து பிரசாரம்
7. நெல்லித்தோப்பு தொகுதியில் ல.ஜ.க., வேட்பாளரை ஆதரித்து பிரசாரம்
ADDED : மார் 28, 2026 08:20 PM

புதுச்சேரி: நெல்லித்தோப்பு தொகுதி பெரியார் நகரில், ல.ஜ.க., வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் ஓட்டு சேகரித்தார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் நெல்லித்தோப்பு தொகுதியில் ல.ஜ.க., சார்பில், போட்டியிடும் ஜெயக்குமார் நேற்று, அக்கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தலைமையில் பெரியார் நகரில் வீடு வீடாக சென்று தர்பூசணி சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.
மதியம் அண்ணா நகர் தேர்தல் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், தொகுதியை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் முன்னிலையில் ல.ஜ.க.,வில் இணைந்தனர். அப்போது, கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் மாரட்டின் பேசுகையில், நெல்லித்தோப்பு மற்றும் காமராஜ் நகர் ஆகிய இரு தொகுதிகளையும் என் குழந்தைகளைப் போல பார்த்து கொள்கிறேன்.
இரு தொகுதிகளிலும் அனைத்து வசதிகளும் செய்து கொடுத்து, உலகிற்கே முன்மாதிரியாக மாற்றிக்காட்டுவேன்' என்றார்.
நிகழ்ச்சில் கட்சி பொதுச் செயலாளர்கள் சுரேஷ், பாபு, துரைசாமி, பரப்புரை பொதுச் செயலாளர் பாலாஜி, பழனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாலையில் பெரியார் நகரில் விடுபட்ட பகுதியில் கூட்டணி கட்சிகளான என்.ஆர்.காங்., -பா.ஜ., - அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளுட்ன வீடு, வீடாக சென்று தர்பூசணி சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தனர்.
