/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
7 பேரிடம் ரூ. 3 லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீஸ் விசாரணை
/
7 பேரிடம் ரூ. 3 லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீஸ் விசாரணை
7 பேரிடம் ரூ. 3 லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீஸ் விசாரணை
7 பேரிடம் ரூ. 3 லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீஸ் விசாரணை
ADDED : அக் 13, 2024 02:20 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் நேற்று முன்தினம் 7 நபர்களிடம் ரூ. 3 லட்சம் மோசடி செய்த சைபர் கிரைம் மோசடி கும்பல் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி, மண்ணாடிப்பட்டு சதிஷ்குமார். ஆன்லைனில் பகுதி நேர வேலை என்ற விளம்பரத்தை நம்பி 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்து ஏமாந்தார்.
ஆருத்ரா நகர், ரமேஷ் என்பவரின் கிரெடிட் கார்டு கடன் தொகையை அதிகரிப்பதாக கூறி ஒ.டி.பி., பெற்று 7,763 ரூபாயை மர்ம நபர்கள் எடுத்தனர். புதுச்சேரியைச் சேர்ந்த பால் என்பவரின் சமூக வலைத்தள பக்கத்தில் மியூட்சுவல் பண்ட் பெயரில் வந்த விளம்பரத்தை நம்பி 22,670 ரூபாய் முதலீடு செய்து ஏமாந்தார்.
வில்லியனுாரைச் சேர்ந்த தேவதாசை தொடர்பு கொண்ட மர்ம நபர், வங்கி தொடர்பான தகவல்களை கூறி, 9,901 ரூபாயை அபகரித்தார்.
காரைக்காலைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரை தொடர்பு கொண்ட மர்ம நபர், வீட்டில் இருந்து வேலை செய்யலாம் என கூறி, 1 லட்சம் ரூபாயை அபகரித்தார். தவளக்குப்பத்தைச் சேர்ந்த இந்துஜாவை தொடர்பு கொண்ட மர்ம நபர் 40 ஆயிரம் ரூபாயை அபகரித்தார்.
இது தொடர்பாக சைபர் கிரைம் மோசடி புகார்கள் பதிவு செய்யும் இணையதள முகவரிகள் மற்றும் 1930 தொலைபேசியில் வந்த புகார்கள் தொடர்பாக புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.