/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மோசடி கும்பலிடம் ரூ.3.80 லட்சம் இழந்த 7 பேர்
/
மோசடி கும்பலிடம் ரூ.3.80 லட்சம் இழந்த 7 பேர்
ADDED : மார் 22, 2025 03:30 AM
புதுச்சேரி: புதுச்சேரி மற்றும் காரைக்காலை சேர்ந்த 7 பேர் ஆன்லைன் மோசடி கும்பலிடம் ரூ.3.80 லட்சத்தை இழந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
பகுதிநேர வேலையாக ஆன்லைனில் முதலீடு செய்து, ரூ. 1.18 லட்சத்தை காரைக்கால் நபர் ஏமாந்தார்.
காரைக்கால் பகுதியை சேர்ந்தவர் ஆன்ந்த். இவரை தொடர்பு கொண்ட மர்மநபர், ஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தே அதிக பணம் சம்பாதிக்கலாம் என, கூறினார். இதையடுத்து, ஆன்லைன் வர்த்தகத்தில் 1 லட்சத்து 18 ஆயிரத்து 730 ரூபாயை ஆனந்த் முதலீடு செய்து, அவருக்கு கொடுத்த டாஸ்க்கை முடித்தார். அதன் மூலம் வந்த லாப தொகையை ஆனந்த் எடுக்க முயன்றபோது, மோசடி கும்பலிடம் பணத்தை இழந்தது தெரியவந்தது.
இதேபோல், கதிர்காமம் கலைவாணி, ரூ. 2 லட்சம், சின்ன இருசம்பாளையம் சுபாஷ் சந்திரபோஸ், 32 ஆயிரத்து 500 ரூபாய், முத்தியால்பேட்டை ஈஸ்வர் 15 ஆயிரம் ரூபாய், பெரிய காலாப்பட்டு பிரவீன்குமார் 7 ஆயிரம் ரூபாய், சேதராப்பட்டு ஜெனிமா 3 ஆயிரத்து 500 ரூபாய், புதுச்சேரி, தாகூர் நகர் சங்கர் 3 ஆயிரத்து 800 ரூபாய் என, மொத்தம் 7 பேர் ஆன்லைன் மோசடி கும்பலிடம் 3 லட்சத்து 80 ஆயிரத்து 530 ரூபாய் இழந்துள்ளார்.
சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.