/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
7 பேரிடம் ரூ. 3 லட்சம் 'அபேஸ்' சைபர் கிரைம் கும்பல் கைவரிசை
/
7 பேரிடம் ரூ. 3 லட்சம் 'அபேஸ்' சைபர் கிரைம் கும்பல் கைவரிசை
7 பேரிடம் ரூ. 3 லட்சம் 'அபேஸ்' சைபர் கிரைம் கும்பல் கைவரிசை
7 பேரிடம் ரூ. 3 லட்சம் 'அபேஸ்' சைபர் கிரைம் கும்பல் கைவரிசை
ADDED : நவ 29, 2024 04:07 AM
புதுச்சேரி: மகளை கைது செய்துள்ளதாக கூறி பெற்றோரிடம் ரூ.75 ஆயிரம் மோசடி செய்த மோசடி கும்பல் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
காரைக்கால் நிரவியை சேர்ந்த ஐஸ்வர்யா என்பவரின் பெற்றோரை வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர், போலீஸ் அதிகாரி பேசுவதாக கூறியுள்ளார். உங்கள் மகள் தற்கொலைக்கு முயன்றதால், அவரை கைது செய்து போலீஸ் ஸ்டேஷனில் வைத்துள்ளோம். அவரை விடுவிக்க பணம் அனுப்புமாறு கூறினர். இதைநம்பி, அவரது பெற்றோர் 75 ஆயிரம் ரூபாய் அனுப்பி ஏமாந்தனர்.
சண்முகாபுரத்தை சேர்ந்த கணேசன் என்பரை தொடர்பு கொண்ட மர்ம நபர், பிரபல பைனான்ஸ் நிறுவனத்தில் குறைந்த வட்டியில் 5 லட்சம் வரை பெற்று தருவதாகவும், அதற்கு செயலாக்க கட்டணம் செலுத்த வேண்டும் என, கூறினார்.
இதைநம்பி கணேசன் பல்வேறு தவணையாக 1 லட்சத்து 62 ஆயிரம் ரூபாய் அனுப்பி ஏமாந்தார். இதேபோல், நெல்லித்தோப்பு சதீஷ் ஷா 15 ஆயிரம், பாகூர் குகன்ராஜ் 20 ஆயிரத்து 50 ரூபாய், அரியூர் சந்தானம் 25 ஆயிரம், தந்தை பெரியார் நகர் மூர்த்தி 2 ஆயிரத்து 850, கொம்பாக்கம் முருகன் 8 ஆயிரம் என, மொத்தம் 7 பேர் ஆன்லைன் மோசடி கும்பலிடம் 3 லட்சத்து 7 ஆயிரத்து 906 ரூபாய் இழந்துள்ளனர்.
இதுகுறித்த புகார்களின் பேரில், புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து, மோசடி கும்பல் குறித்து விசாரித்து வருகின்றனர்.