தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ எஸ்.ஐ., பணிக்கான தேர்வு 74 பெண்கள் தகுதி

 எஸ்.ஐ., பணிக்கான தேர்வு 74 பெண்கள் தகுதி

 எஸ்.ஐ., பணிக்கான தேர்வு 74 பெண்கள் தகுதி


ADDED : பிப் 08, 2026 04:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 08, 2026 04:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் சப் இன்ஸ்பெக்டர் பணிக்கு பெண்களுக்கான 4ம் நாள் உடற்தகுதி தேர்வில் 254 பேர் பங்கேற்றனர்.

புதுச்சேரி போலீஸ் துறையில் காலியாக உள்ள 70 சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப, விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

தொடர்ந்து, கோரிமேடு ஆயுதப்படை பயிற்சி மைதானத்தில் ஆண்கள் பிரிவுக்கான உடல் தகுதி தேர்வு நடந்து முடிந்தது. அதில் மொத்தம் 1,244 பேர் தேர்வாகினர்.

இதையடுத்து, பெண்கள் பிரிவுக்கான உடற்தகுதி தேர்வு கடந்த 4ம் தேதி துவங்கியது. அதில், முதல் 3 நாட்களில் 55 பேர் தேர்வாகினர்.

நேற்று, 4ம் நாள் ஆயிரத்து 325 பேர் அழைக்கப்பட்டு 254 பேர் பங்கேற்றனர். அதில் 19 பேர் மட்டுமே தேர்வாகினர். இதனால், பெண்கள் பிரிவில் மொத்தம் 74 பேர் தேர்வாகியுள்ளனர். சப் இன்ஸ்பெக்டர் பணிக்கான உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற வர்களுக்கான எழுத்து தேர்வு வரும் 22ம் தேதி நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us