தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரியில் பழிக்கு பழியாக ரவுடி வெட்டி கொலை முக்கிய குற்றவாளிகள் உட்பட 8 பேர் கைது

புதுச்சேரியில் பழிக்கு பழியாக ரவுடி வெட்டி கொலை முக்கிய குற்றவாளிகள் உட்பட 8 பேர் கைது

புதுச்சேரியில் பழிக்கு பழியாக ரவுடி வெட்டி கொலை முக்கிய குற்றவாளிகள் உட்பட 8 பேர் கைது


ADDED : செப் 20, 2026 08:42 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 20, 2026 08:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில், பழிக்கு பழியாக ரவுடி ஆனந்த் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளிகள் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி, பாக்கமுடையான்பட்டு, வன்னியர் வீதியைச் சேர்ந்தவர் ஆனந்த் (எ) முண்டகண்ணு ஆனந்த், 32. ரவுடியான இவர், மீது 2 கொலை, 3 கொலை முயற்சி உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன. கடந்த 18 ம் தேதி ஆனந்த் தனது பிறந்த நாளை வீட்டில் குடும்பத்துடன் கொண்டாடினார். பின், மதியம் வழக்கறிஞரை சந்திப்பதிற்காக, தனது ஸ்கூட்டரில் இ.சி.ஆர்., வழியாக சிவாஜி சிலை நோக்கி சென்று கெண்டிருந்தார்.

அவரை பின்தொடர்ந்து வந்த 8 பேர் கொண்ட கும்பல், வழிமறித்து சரமாரியாக வெட்டி கொலை செய்தது. அவரது மனைவி ராஜேஸ்வரி புகாரின் பேரில், லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.

கொலை வழக்கில் தொடர்புடைய கருவடிக்குப்பம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த சகாதேவன் மகன் சந்துரு (எ) தமிழ்செல்வன், 26; எடையன்சாவடி சாலை கணேசன் மகன் சஞ்சய், 25; கருவடிக்குப்பம் ஓடை தெரு, லட்சுமி நகர் சங்கர் மகன் நாகராஜ், 26; பொன்னியம்மன்கோவில் தெரு ஞானவேல் மகன் கன்னியப்பன், 23; மேஜர் சரவணன் நகர் குமார் மகன் ராஜ்கமல், 28; மதுரை முத்துராமலிங்க வீதியைச் சேர்ந்த காளிஸ்வரன் மகன் ஸ்ரீகாந்த், 26; சிவகங்கை மாவட்டம், மன்னார்குடி, கீழபசலை, நடுத்தெரு ராமு மகன் அஜித், 23; மாரிமுத்து மகன் கன்னீஸ்வரன், 22, ஆகிய 8 பேரை வடக்கு பகுதி கிரைம் குழுவினர் கைது செய்தனர்.

இதில், போலீசார் துரத்தும்போது தப்பியோட முயன்ற சந்துரு மற்றும் சஞ்சய் ஆகியோர் தவறி விழுந்ததில் இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.  கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்த 6 அரிவாள், 4 பைக், 4 மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இச்சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், ‘கடந்த மே மாதம் இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவிட்ட தகராறில் லாஸ்பேட்டை, நெருப்புக்குழி மைதானத்தில் பவளராஜ் (எ) ராஜன் என்பவரை ரவுடி சுல்லான் (எ) பழனி முருகன் தலைமையிலான கும்பல் வெட்டி கொலை செய்தது. இந்த சம்பவத்தில் பழனிமுருகன், கமலேஷ் மற்றும் சிறுவன் ஒருவர் கைது செய்யப்பட்டனர். 

இதில், பழனி முருகன் குண்டர் தடுப்பு சட்டத்திலும், கமலேஷிற்கு ஜாமின் கிடைக்காமல் சிறையில் உள்ளனர். இந்நிலையில், பவளராஜ் கொலைக்கு பழி தீர்க்க அவரது நண்பரான சந்துரு முடிவு செய்தார். ஆனால், பவளராஜ் கொலை வழக்கில் தொடர்புடைய பழனி முருகன், கமலேஷ் இருவரும் சிறையில் இருப்பதால், பழனி முருகனின் கூட்டாளியான ஆனந்தை கொலை செய்ய திட்டமிட்டனர். இதற்காக, மதுரை, சிவகங்கையில் உள்ள தனது நண்பர்களை சந்துரு புதுச்சேரிக்கு வரவழைத்தார். தனியார் ஓட்டலில் தங்கிய அனைவரும் கொலைக்கான திட்டத்தை தீட்டினர்.

ஆனந்த் பிறந்த நாளான கடந்த 18ம் தேதி இ.சி.ஆரில் ஸ்கூட்டரில் சென்றபோது, துரத்தி சென்று வெட்டி கொலை செய்ததுடன், பவளராஜிக்காக., பவளராஜிக்காக என, கோஷமிட்டு சென்றது தெரியவந்தது.

இந்த வழக்கில் மாஜி ஐ.ஆர்.பி.என்., ஜெகன் இக்கொலைக்கான திட்டம் தயாரித்து கொடுத்ததும், ஆனந்த் எந்த வழியில் செல்கிறார் என்பதை எட்வீன்பால் கண்காணித்து கொலை கும்பலுக்கு தகவல் தெரிவித்தும் தெரியவந்துள்ளது.

அதனால், ஜெகன் மற்றும் எட்வீன்பால் ஆகியோரை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். கொலை சம்பவத்தில் ஈடுப்பட்ட சந்துரு, ஜெகன் உள்ளிட்டோரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி., மூலம் கலெக்டருக்கு பரிந்துரை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

பாக்ஸ்: 

கடும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை:: லாஸ்பேட்டை, இ.சி.ஆர். எப்போதும் வாகன போக்குவரத்து நிறைந்த பகுதியாகும். கடந்த 18ம் தேதி பட்டபகலில் முன்விரோதம் காரணமாக ரவுடியை, 8 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து சரமாரியாக வெட்டியதை கண்ட அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

அவர்களின் அச்சத்தை போக்கும் வகையில், கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது இனி இதுபோன்று சம்பவத்தில் யாரும் ஈடுபடாத வகையில் போலீஸ் உயரதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us