/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
8 இளநிலை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு
/
8 இளநிலை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு
ADDED : ஜன 27, 2025 05:07 AM
புதுச்சேரி: எட்டு இளநிலை கணக்கு அதிகாரிகள், சீனியர் கணக்கு அதிகாரிகளாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் நிதித் துறையில் பணியாற்றும் எட்டு இளநிலை கணக்கு அதிகாரிகளுக்கு சீனியர் கணக்கு அதிகாரியாக பதவி உயர்வு அளித்து நிதி துறை உத்தரவிட்டுள்ளது. அவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பொதுப்பணித் துறை பொது சுகாதார கோட்டம் இளநிலை கணக்கு அதிகாரி வாசவி, பதவி உயர்வுடன், பள்ளி கல்வித் துறைக்கும், தாகூர் கலை அறிவியல் கல்லுாரி இளநிலை கணக்கு அதிகாரி லட்சுமி, போக்குவரத்து துறைக்கும், நகர அமைப்பு குழும இளநிலை கணக்கு அதிகாரி ராணி, ஆதிதிரவிடர் நலத் துறைக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தலைமை செயலக இளநிலை கணக்கு அதிகாரி பக்கிரிசாமி, கணக்கு கருவூலத் துறைக்கும், பொதுப்பணித் துறை தெற்கு கட்டட சாலை கோட்ட இளநிலை கணக்கு அதிகாரி முரளிதரன் மின்துறைக்கும், இந்திராகாந்தி அரசு மருத்துவமனை இளநிலை கணக்கு அதிகாரி சாய்நாதன் எழுது பொருள் அச்சுத் துறைக்கும் பதவி உயர்வுடன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், ஏனாம் பொதுப்பணித் துறை இளநிலை கணக்கு அதிகாரி லங்கா சீனா லோவ ராஜு, வேளாண் துறைக்கும், செய்தி விளம்பரத் துறை இளநிலை கணக்கு அதிகாரி சிவநாதன், காரைக்கால் கலெக்டர் அலுவலகத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவினை நிதித் துறை துணை சார்பு செயலர் ரத்னகோஷ் கிேஷார் சவுரே பிறப்பித்துள்ளார்.

