8 என்.ஆர்.காங்., வேட்பாளர் ரவிக்குமார் வில்லியனுாரில் தீவிர ஓட்டு சேகரிப்பு
8 என்.ஆர்.காங்., வேட்பாளர் ரவிக்குமார் வில்லியனுாரில் தீவிர ஓட்டு சேகரிப்பு
ADDED : மார் 28, 2026 08:26 PM

வில்லியனுார்: வில்லியனுார் தொகுதி என்.ஆர்.காங்., வேட்பாளர் ரவிக்குமார் ஒதியம்பட்டு மற்றும் கொம்பாக்கத்தில் ஜக்கு சின்னத்திற்கு ஓட்டு கேட்டு பிரசாரம் மேற்கொண்டார்.
வில்லியனுார் தொகுதியில், தே.ஜ., கூட்டணியில் என்.ஆர்.காங்., வேட்பாளர் ரவிக்குமார் போட்டியிடுகிறார். நேற்று காலை கூட்டணி கட்சியான அ.தி.மு.க., - பா.ஜ., - அ.ம.மு.க., - ல.ஜ.க., மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் ஒதியம்பட்டு வண்ணார பரதேசி கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு ஒதியம்பட்டு, கொம்பாக்கம், கொம்பாக்கம் பேட், முஸ்லிம் வீதி உள்ளிட்ட பகுதிகளில் 'ஜக்கு' சின்னத்துக்கு ஓட்டு கேட்டு வீடு வீடாக சென்று ஓட்டு சேகரித்தார்.
அப்போது முதல்வர் ரங்கசாமி ஆட்சியில், நேர்மையான முறையில் அரசு வேலை வழங்கியதையும், முதியோர் உதவித்தொகை உயர்த்தியது. இலவச அரிசி திட்டம், ஏழை மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்கியது உள்ளிட்ட சாதனைகளை மக்களிடம் விளக்கி ஓட்டு சேகரித்தார். ஓட்டு கேட்டு சென்ற வேட்பாளர் ரவிக்குமாரை, பல இடங்களில் மக்கள் ஆரத்தி எடுத்தும் மலர் துாவி வரவேற்றனர்.
