sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கொள்ளையடிக்க சதி திட்டம்: லாஸ்பேட்டையில் 8 பேர் கைது

கொள்ளையடிக்க சதி திட்டம்: லாஸ்பேட்டையில் 8 பேர் கைது

கொள்ளையடிக்க சதி திட்டம்: லாஸ்பேட்டையில் 8 பேர் கைது


UPDATED : மே 24, 2026 07:14 PM

ADDED : மே 24, 2026 07:11 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 24, 2026 07:14 PM ADDED : மே 24, 2026 07:11 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: லாஸ்பேட்டையில் கத்தியுடன் பதுங்கியிருந்த 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

லாஸ்பேட்டை பகுதியில் நேற்று முன்தினம் இரவு சந்தேகப்படும்படி ஒரு கும்பல் நடமாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, லாஸ்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் பாபு மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு கத்தியுடன் மறைந்திருந்த 8 பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.

விசாரணையில், லாஸ்பேட்டையை சேர்ந்த வேலு மகன்​டக்கி விக்கி (எ) விக்னேஸ்வரன், 27; பாபு மகன் குஸ்கா​பாஸ்கர் (எ) பாஸ்கர் 23; பாலமுருகன் மகன் ரைஸ் என்கிற அகிலன், 23; ​முருகன் மகன் நாராயணன், 29; மூர்த்தி மகன் ஹரிஹரன், 29; செல்வமணி மகன் ஏர்போர்ட் (எ) ஹரிபிரசாத், 18; வெங்கடேசன் மகன் மனோஜ், 20; பரந்தாமன் மகன் பிரவீன், 22, என்பதும் அவர்கள் அப்பகுதியில் கொள்ளை அடிக்க சதி திட்டம் தீட்டியதும் தெரியவந்தது. அவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்து 8 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us