தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஓட்டுக்கு பணம் பட்டுவாடா செய்த 8 பேர் சிக்கினர் புதுச்சேரியில் 'ட்ரோன்' பறக்கும் படை அதிரடி

 ஓட்டுக்கு பணம் பட்டுவாடா செய்த 8 பேர் சிக்கினர் புதுச்சேரியில் 'ட்ரோன்' பறக்கும் படை அதிரடி

 ஓட்டுக்கு பணம் பட்டுவாடா செய்த 8 பேர் சிக்கினர் புதுச்சேரியில் 'ட்ரோன்' பறக்கும் படை அதிரடி


ADDED : ஏப் 01, 2026 04:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 01, 2026 04:28 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில், தேர்தல் துறையின் 'ட்ரோன்' பறக்கும் படை கண்காணிப்பில், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்த 8 பேர் சிக்கினர். 3 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

புதுச்சேரி சட்டசபை தேர்தலில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை நிலைநாட்ட தேர்தல் துறை நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, 30 தொகுதிகளிலும் ட்ரோன்கள் மூலம் கண்காணிப்பு பணியை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

அதில், மண்ணாடிபட்டு தொகுதி திருக்கனுாரில் ட்ரோன் மூலம் கண்காணித்தபோது, வீடுகளுக்குச் சென்று வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க முயன்ற திருமாறன்,36; சிலம்பரசன்,34; மற்றும் டிவின் சக்ரவர்த்தி,30; ஆகிய மூவரை பறக்கும் படையினர் கையும் களவுமாக பிடித்தனர். இவர்களிடம் இருந்து ரூ. 55 ஆயிரம் ்பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோன்று மங்கலம் தொ குதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து கொண்டிருந்த ராஜேந்திரன், சுரேஷ் ஆகியோரை பறக்கும் படையினர் பிடித்தனர். அவர்களிடமிருந்து ரூ.11,300 மற்றும் ஒரு பைக் பறிமுதல் செய்யப்பட்டு, வில்லியனூர் போலீசில் ஒப்படைக்கப்பட்டது. ரூ.2.40 லட்சம் பறிமுதல்

லாஸ்பேட்டை, நீதிபதி குடியிருப்பு அருகே பறக் கும் படை அதிகாரி மணிவண்ணன் தலைமையிலான குழுவினர், சந்தேகிக்கும் வகையில் நின்றிருந்த மூவரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள், லாஸ்பேட்டையை சேர்ந்த சந்திரசேகர், அசோக், பாலாஜி என்பதும், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்து கொண்டிருந்தது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து ரூ.2.40 லட்சம் மற்றும் பூத் சிலிப் ஆகியவற்றை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து பறக்கும் படை அதிகாரி மணிவண்ணன் அளித்த புகாரின் பேரில், லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, பிடிபட்ட மூவரிடம் விசாரித்து வருகின்றனர்.

தேர்தல் துறை எச்சரிக்கை


இந்த இரு தொகுதி களில் வாக்காளர்களுக்கு கொடுக்க இருந்த பணம் ரூ.66,300 தேர்தல் துறை பறிமுதல் செய்துள்ளது. வாக்காளர் களுக்குப் பணம் அல்லது அன்பளிப்பு வழங் குவது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா சட்டங்களின் கீழ் கடுமையான தண்டனைக்குரிய குற்றமாகும் என்று தேர்தல் துறை எச்சரித்துள்ளது. தவறு செய்பவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் பாயும் என்றும், பொதுமக்கள் தேர்தல் முறைகேடுகள் குறித்து 'சி-விஜில்' செயலி அல்லது 1950 என்ற கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம் என தலைமை தேர்தல் அதிகாரி ஜவஹர் தெரிவித்துள்ளார்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us