ADDED : மார் 08, 2026 03:43 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் 8 பேரிடம் ரூ.1.87 லட்சம் மோசடி செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரியை சேர்ந்த பெண் ஆன்லைனில் வேலை தேடினார். அவரை தொடர்பு கொண்ட மர்ம நபர் ஆன்லைன் மூலம் வீட்டில் இருந்து வேலை செய்து அதிக லாபம் சம்பாதிக்கலாம் என, ஆசைவார்த்தை கூறினார். இதனை நம்பிய அவர், மர்ம நபரின் வங்கி கணக்கிற்கு 48 ஆயிரத்தை அனுப்பி ஏமாந்தார்.
இதேபோல் அரியூர் சேர்ந்த நபர் 45 ஆயிரத்து 582 ரூபாய், அரியாங்குப்பத்தை சேர்ந்த நபர் 45 ஆயிரம், அரியூர் நபர் 23 ஆயிரத்து 545, கருவடிக்குப்பம் நபர் 14 ஆயிரத்து 750, புதுச்சேரி நபர் 7 ஆயிரத்து 500, லாஸ்பேட்டை நபர் ஆயிரத்து 550, பாகூர் நபர் ஆயிரத்து 399 ரூபாய் என, மொத்தம் ஒரு லட்சத்து 87 ஆயிரத்து 326 ரூபாயை ஆன்லை மோடியில் இழந்துள்ளனர்.
இது குறித்த புகார்களின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து ஆன்லைன் மோசடி கும்பலை தேடி வருகின்றனர்.
