/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நுாலகத்தில் படித்தவர்கள் அசத்தல் உதவியாளர் தேர்வில் 8 பேர் தேர்ச்சி

ADDED : ஜூன் 28, 2025 11:53 PM
புதுச்சேரி அரசின் 256 பணியிடங்களுக்கான உதவியாளர் தேர்வு கடந்த 22ம் தேதி நடந்தது. 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள் கடந்த 24ம் தேதி வெளியானது.
இத்தேர்வில் தேர்ச்சி பெற ஏராளமானோர் பல்வேறு கோச்சிங் சென்டர்களில் பல ஆயிரம் பணம் கட்டி தீவிரமாக படித்தனர். இதேபோல், புதுச்சேரி ரோமன் ரோலண்ட் நுாலகத்திலும் ஏராளமான இளைஞர்கள் படித்தனர்.
இவர்களுக்கு உதவிடும் வகையில் நுாலகத்தில் வேலை வழிகாட்டி நுால்கள் ஏராளமாக வாங்கி வைக்கப்பட்டுள்ளன. மேலும், தனி இடம் ஒதுக்கப்பட்டு படிப்பதற்கு வசதியாக இருக்கைகளும் அமைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் உதவியாளர் தேர்வில் நுாலகத்தில் படித்த தமிழ், பிரசாந்த், செழியன், அய்யப்பன், சுரேந்தர், சந்தோஷ் குமார், ஜெகன் உள்ளிட்ட 8 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்கள் நுாலகம் சார்பில் விரைவில் கவுரவிக்கப்பட உள்ளனர்.