தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மீனவரை கத்தியால் வெட்டிய 8 வாலிபர்கள் கைது

 மீனவரை கத்தியால் வெட்டிய 8 வாலிபர்கள் கைது

 மீனவரை கத்தியால் வெட்டிய 8 வாலிபர்கள் கைது


ADDED : டிச 16, 2025 05:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 16, 2025 05:40 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம்: தவளக்குப்பத்தில், மீனவரை வழிமறித்து கத்தியால் வெட்டி 8 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

நல்லவாடு கிராமத்தை சேர்ந்தவர் வெற்றிவேல், 45; மீனவர். இவரது உறவினர் நிச்சயதார்த்தம் நிகழ்ச்சி, தவளக்குப்பம் அருகே திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் நடந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு காரில் வந்தவர்கள், காரை சாலையில் நிறுத்தி விட்டு மண்டபத்திற்கு சென்றனர். அவ்வழியாக பைக்கில் வந்த பூரணாங்குப்பத்தை சேர்ந்த பிரவீன், 28; இவருடன் வந்தவர் ஹாரன் அடித்தார்.

இதில் ஆத்திரமடைந்த வெற்றிவேல் அவரது உறவினர்கள் சேர்ந்து பிரவீனை தாக்கியதில், அவர் காயமடைந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில், வெற்றிவேல், அவரது மனைவி சசிகுமாரி, 42; இருவரும் நேற்று முன்தினம் இரவு 9:00 மணியளவில் காரில் சென்று போது, தவளக்குப்பம் அருகே கும்பல் ஒன்று காரை வழிமறித்து, வெற்றிவேலை கத்தியால் சரமாறியாக வெட்டி, அவரது மனைவியை தாக்கினர். இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இச்சம்பத்தை கண்டித்தும், குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி நல்லவாடு மீனவர்கள் நேற்று காலை 10:00 மணியளவில், தவளக்குப்பம் சந்திப்பில், மறியலில் ஈடுபட்டனர்.

இவர்களிடம் எஸ்.பி., ஜி ந்தா கோதாண்டராமன், சப் இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன் பேச்சு வார்த்தை நடத்தி, நடவடிக்கை எடுப்பதாக கூறியதால் அவர்கள் கலைந்து சென்றனர்.

இது தொடர்பாக, தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து, பூரணாங்குப்பத்தை சேர்ந்த ஏழுமலை, 25; தர்மராஜ், 22; குருமூர்த்தி, 22; அரிஹரன், 19; விஷ்வா, 19; யஷ்வந்த், 21; சரவணன், 20; ரகு, 20 ஆகிய 8 பேரை, கைது செய்து, கோர்ட்டில், ஆஜர்ப்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us