/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாகூரில் 9 செ.மீ., மழை நெற்பயிர்கள் மூழ்கின
/
பாகூரில் 9 செ.மீ., மழை நெற்பயிர்கள் மூழ்கின
ADDED : நவ 27, 2024 11:19 PM

பாகூர் : பாகூர் பகுதியில் 9 செ.மீ., மழை பெய்தது.
புதுச்சேரியில் பருவ மழை துவங்கி உள்ள நிலையில், அவ்வப்போது கன மழை பெய்து வருகிறது. கடந்த வாரம் பெய்த மழையால்,பாகூர் பகுதியில் உள்ள 24 ஏரிகளில் 18 ஏரிகள் நிரம்பியது. முக்கிய ஏரிகளான பாகூர் ஏரி, கிருமாம்பாக்கம் ஏரி, பரிக்கல்பட்டு ஏரி உள்ளிட்ட ஏரிகளும் வேகமாக நிரம்பி வருகின்றன.
இந்நிலையில், நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் பாகூரில் 9 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. இதனால,பாகூர் ஏரியின் நீர் மட்டம் 2.50 மீட்டராக உயர்ந்துள்ளது.
மேலும், மழையின் காரணமாக, பல கிராமங்களில் நெல் வயல்களில் தண்ணீர் தேங்கிறது. இதனால், சம்பா பருவத்தில் காலம் கடந்து நடவு செய்யப்பட்ட நெல் நாற்று வளர்ச்சி பெறாத நிலையில் நீரில் மூழ்கி உள்ளது.
மற்றொரு புறம், சம்பா முன் பருவத்தில் நடவு செய்த நெல் பயிர்களில் கதிர்கள் வெளிவந்த நிலையில், மழையின் காரணமாக வயலில் சாய்ந்து கிடக்கிறது. இதனால், விவசாயிகள் கவலையில் உள்ளனர்.