/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
9 பேரிடம் ரூ. 36 லட்சம் 'அபேஸ்' சைபர் கிரைம் கும்பல் கைவரிசை
/
9 பேரிடம் ரூ. 36 லட்சம் 'அபேஸ்' சைபர் கிரைம் கும்பல் கைவரிசை
9 பேரிடம் ரூ. 36 லட்சம் 'அபேஸ்' சைபர் கிரைம் கும்பல் கைவரிசை
9 பேரிடம் ரூ. 36 லட்சம் 'அபேஸ்' சைபர் கிரைம் கும்பல் கைவரிசை
ADDED : ஜன 25, 2024 05:20 AM
புதுச்சேரி, : புதுச்சேரியில் ஒன்பது பேரிடம் 36 லட்சம் ரூபாய் மோசடி செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரியை சேர்ந்த மகேந்திரன் என்பவர், ஆன்லைனில் பொருட்கள் வாங்க 68 ஆயிரம் ரூபாய் செலுத்தி ஏமாந்தார். இதேபோல், ஆன்லைனில் பகுதிநேர வேலை தருவதாக கூறியதை நம்பி ராமசாமி என்பவர் 12 லட்சத்து 80 ஆயிரம், பாலசந்தர் என்பவர் 41 ஆயிரத்து 300 ரூபாயை இழந்தனர்.
ஆன்லைனில் முதலீடு செய்து, ராஜ ராஜசோழன் 9 லட்சம், ஸ்ரீராம் 12 லட்சத்து 59 ஆயிரம் ரூபாய் இழந்தனர். புதுச்சேரி அக்ஷய் என்பவர் 6 ஆயிரத்து 75, ஜவேரியா 31 ஆயிரத்து 856 ரூபாய் இழந்தனர்.
ஏனாம் பகுதியை சேர்ந்த கணேஷ்குமார் என்பவரின் வங்கி கணக்கில் இருந்து 3 ஆயிரத்து 100, குப்புலட்சுமி என்பவரின் வங்கி கணக்கில் இருந்து 10 ஆயிரம் ரூபாய் அபகரிக்கப்பட்டுள்ளது.
நேற்று ஒரே நாளில் 9 பேரிடம் 35 லட்சத்து 99 ஆயிரத்து 331 ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது. இது குறித்த புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து, சைபர் கிரைம் மோசடி கும்பலை தேடி வருகின்றனர்.
இதே போல் புதுச்சேரியை சேர்ந்த பெண் ஒருவருக்கு புதிய நம்பரில் இருந்து வீடியோ கால் வந்தது. அந்த அழைப்பை ஏற்றபோது மறுமுனையில் ஆண் நபர் நிர்வாணமாக காட்சி அளித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பெண் இணைப்பை துண்டித்தார்.
இதுகுறித்து அவர், அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.