/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முன்விரோதத்தில் வாலிபர் கொலை 3 சிறுவர்கள் உட்பட 9 பேர் கைது
/
முன்விரோதத்தில் வாலிபர் கொலை 3 சிறுவர்கள் உட்பட 9 பேர் கைது
முன்விரோதத்தில் வாலிபர் கொலை 3 சிறுவர்கள் உட்பட 9 பேர் கைது
முன்விரோதத்தில் வாலிபர் கொலை 3 சிறுவர்கள் உட்பட 9 பேர் கைது
ADDED : நவ 15, 2025 05:59 AM

புதுச்சேரி: முன்விரோதம் காரணமாக வாலிபரை வெட்டி கொலை செய்த வழக்கில் மூன்று சிறுவர்கள் உள்ளிட்ட 9 பேரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
புதுச்சேரி, புதுசாரம், முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் மகன் சந்தோஷ்,21; இவரது நண்பர், நைனார்மண்டபம் மாதேஷ். இவருக்கும், டி.வி., நகர் ஹானஸ்ட்ராஜ் தரப்பினருக்கும் இடையே முன்விரோதம் காரணமாக அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது.
கடந்த 12ம் தேதி இரவு, சாரத்தில் சந்தோஷ், மாதேஷ் மற்றும் நண்பர்கள் பேசிக் கொண்டிருந்தனர். நள்ளிரவு 12:30 மணிக்கு அனைவரும் பைக்குகளில் வீட்டிற்கு புறப்பட்டனர். செல்லான் நகர் வழியாக சென்றபோது, ரெயின்போ நகர் 5வது குறுக்கு தெரு வில் ஹானஸ்ட் ராஜ் தரப்பினர் மது குடித்துக் கொண்டிருந்தனர். உடன், மாதேஷ் தரப்பினர், அவர்கள் மீது கற்களை வீசி தாக்கினர்.
பதிலுக்கு ஹானஸ்ட்ராஜ் தரப்பினர் கத்தி மற்றும் தடிகளுடன் விரட்டினர். அப்போது, கால் தடுக்கி விழுந்த சந்தோைஷ, ஹானஸ்ட்ராஜ் தரப்பினர் சுற்றி வளைத்து வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர்.
புகாரின் பேரில் பெரியக்கடை இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து, தட்டாஞ்சாவடி மார்க்கெட் கமிட்டி அருகே பதுங்கியிருந்த டி.வி.நகர் ஹானஸ்ட்ராஜ்,23; விமல் சந்திரன்,23; விஷ்வா ஆதித்யா,21; நிர்மல்,18; அருண்குமார்,24; கருவடிக்குப்பம் லியோ அரவிந்த்ராஜ்,22; மற்றும் மூன்று சிறுவ ர்கள் என 9 பேரை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.
பி ன்னர் அவர்களை விசாரித்து நேற்று மாஜிஸ்திரேட் கோர்ட்(2) ஆஜர்படுத்தி, ஹானஸ்ட் ராஜ் உள்ளிட்ட 6 பேரை காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். சிறுவர்கள் 3 பேரையும், அரியாங்குப்பம் சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனர்.

