தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/தமிழகத்தில் வீசிய புத்தக புயல்... புதுச்சேரியில் படு உஷார்..

தமிழகத்தில் வீசிய புத்தக புயல்... புதுச்சேரியில் படு உஷார்..

தமிழகத்தில் வீசிய புத்தக புயல்... புதுச்சேரியில் படு உஷார்..


UPDATED : நவ 21, 2026 05:26 PM

ADDED : நவ 21, 2026 05:26 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 21, 2026 05:26 PM ADDED : நவ 21, 2026 05:26 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழகத்தில் பொது நூலகங்களுக்குப் புத்தகங்கள் வாங்கியதில் நடந்த மெகா முறைகேடு, அரசியல் வட்டாரத்தையே ஆட்டம் காண வைத்திருக்கிறது. லஞ்ச ஒழிப்புத் துறையின் கிடுக்கிப்பிடி விசாரணையும், அடுத்தடுத்த கைதுகளும் அதிகாரிகள் மத்தியில் கிலியை ஏற்படுத்தியிருக்கின்றன.

பக்கத்து மாநிலமான தமிழகத்தில் இப்படியொரு புயல் வீசிக்கொண்டிருக்க, அதன் அனல் காற்று புதுச்சேரிப் பக்கமும் அடிக்க ஆரம்பித்திருக்கிறது. ஆனால், இங்கே கதை தான் வேறு. புதுச்சேரியில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களின் வாசிப்புத் திறனை வளர்க்கவும், பள்ளி நுாலகங்களைப் புதுப்பிக்கவும் எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து புத்தகங்கள் வாங்கத் திட்டமிடப்பட்டது.

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் இதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றபோது தான், புதுச்சேரி கலெக்டர் குலோத்துங்கன் தன் கறார் முகத்தைக் காட்டியிருக்கிறார்.

நோக்கம் நல்லதாக இருக்கலாம்... ஆனால், வழியும் சுத்தமாக இருக்க வேண்டும்.. இதுதான் கூட்டத்தில் கலெக்டர் உதிர்த்த தாரக மந்திரம். மாணவர்களுக்குப் புத்தகங்கள் வழங்குவது வரவேற்கத்தக்கது தான். அதில் மாற்றுக் கருத்தே இல்லை.

ஆனால், புத்தகக் கொள்முதலில் துளிகூட முறைகேட்டுக்கு இடமிருக்கக் கூடாது. டெண்டர் நடைமுறைகள் சரியாகப் பின்பற்றப்பட்டுள்ளனவா.. தேர்வு செய்யப்பட்ட புத்தகங்கள் மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் தரமானவையாக இருக்கின்றனவா? விலை நிர்ணயத்தில் எந்த ஒளிவுமறைவும் இல்லையா.. இவை அனைத்தையும் அணு அணுவாக ஆய்வு செய்த பிறகே, புத்தகங்களைப் பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டும் என அதிகாரிகளுக்கு கிரீன் சிக்னல் கொடுக்காமல், ரெட் அலர்ட் கொடுத்துவிட்டார் கலெக்டர்.

கலெக்டரின் இந்த அதிரடி உத்தரவால், வழக்கமான வேகத்தில் கோப்புகளை நகர்த்த நினைத்த அதிகாரிகள் சற்று ஜெர்க் ஆகிவிட்டார்கள். உடனடியாக, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அதிகாரிகள் புத்தகக் கொள்முதல் தொடர்பான மொத்தப் பட்டியலையும் கையில் எடுத்து, தீவிர ஆய்வில் இறங்கியிருக்கிறார்கள்.

புத்தகங்களின் தரம் முதல் விலைப்பட்டியல் வரை அனைத்தையும் அலசி ஆராய்ந்து, விரைவில் கலெக்டரிடம் அறிக்கை சமர்ப்பிக்கத் தயாராகி வருகிறார்கள். வரும் முன் காப்பதே புத்திசாலித்தனம் என்பதற்கு ஏற்ப, தமிழகத்தில் வெடித்த புத்தக ஊழல் சர்ச்சை புதுச்சேரிக்குள் எட்டிப் பார்ப்பதற்கு முன்பே, கதவை இழுத்துப் பூட்டியிருக்கிறார் கலெக்டர் குலோத்துங்கன்.

இந்த முன்எச்சரிக்கை நடவடிக்கை, பாராட்டையும், சில தரப்பினர் மத்தியில் கலக்கத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us