/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பட்டாசு வெடித்ததால் தகராறு இருதரப்பினர் மீது வழக்கு
/
பட்டாசு வெடித்ததால் தகராறு இருதரப்பினர் மீது வழக்கு
பட்டாசு வெடித்ததால் தகராறு இருதரப்பினர் மீது வழக்கு
பட்டாசு வெடித்ததால் தகராறு இருதரப்பினர் மீது வழக்கு
ADDED : நவ 06, 2024 04:32 AM
புதுச்சேரி : மகனிடம் தகராறு செய்ததை தட்டிக்கேட்ட தந்தையை உருட்டு கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் ராணுவ வீரர் மீது போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர்.
புதுச்சேரி முத்திரைப்பாளையம் பாம்பாட்டி வீதியைச் சேர்ந்தவர் கணபதி இவரது மகன் கமலக்கண்ணன் 15, இவர் தீபாவளியன்று வீட்டு வாசலில் பட்டாசு வெடித்து கொண்டிருந்தார்.
இதனை கண்டித்த பக்கத்து வீட்டைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் பூபாலன், கமலக்கண்ணனை தாக்கினார்.
இதனை தட்டிக்கேட்ட தாய் கஸ்துாரி, தந்தை கணபதி ஆகியோரை பூபாலன், அவரது தந்தை மாணிக்கம், மனைவி கற்பகம் ஆகியோர் செங்கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
படுகாயமடைந்த கணபதி கொடுத்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழங்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
அதேபோல் பூபாலனை தாக்கிய கணபதி, அவரது மனைவி கஸ்துாரி, சகோதரி ராணி ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகினறனர்.