/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பெண்ணை உல்லாசத்திற்கு அழைத்த நபர் மீது வழக்கு
/
பெண்ணை உல்லாசத்திற்கு அழைத்த நபர் மீது வழக்கு
ADDED : அக் 03, 2024 05:03 AM
புதுச்சேரி, : மேட்டுப்பாளையத்தில் பெண்ணை உல்லாசத்திற்கு அழைத்து மிரட்டிய நபர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி, மேட்டுப்பாளையம் சாணரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார், 42. இவர் நேற்று முன்தினம் இரவு அதேப்பகுதியில் உள்ள ஒரு பெண் வீட்டிற்கு சென்று, கதவை தட்டியுள்ளார்.
இதையடுத்து, அப்பெண் கதவை திறந்தபோது, வீட்டின் வெளியே ரவிக்குமார் நிர்வாணமாக நின்று கொண்டு, தன்னுடன் உல்லாசமாக இருக்குமாறு அழைத்துள்ளார். மேலும், வரவில்லை என்றால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார்.
இதனால், அப்பெண் சத்தம் போட்டதால், அங்கு பொதுமக்கள் திரண்டனர். பொதுமக்களை கண்ட ரவிக்குமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
புகாரின் பேரில், மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.