தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/இடத்தில் ரகளை 7 பேர் மீது வழக்கு பதிவு

இடத்தில் ரகளை 7 பேர் மீது வழக்கு பதிவு

இடத்தில் ரகளை 7 பேர் மீது வழக்கு பதிவு


ADDED : நவ 29, 2026 06:08 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 29, 2026 06:08 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: டி நகர் போலீசார் தட்டாஞ்சாவடி மார்க்கெட் கமிட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு மது போதையில் ரகளை செய்த திலாஸ்பேட்டை நிர்மல்குமார்,33; லாஸ்பேட்டை ராஜ்குமார்,36; கலியபெருமாள்,46; பாக்கமுடையான்பட்டு தனியார் பார் அருகில் ரகளை செய்த லாஸ்பேட்டை பவித்ரன்,21; ரெட்டியார்பாளையம் கணேஷ்,32; ஆகியோர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

உருளையன்பேட்டை போலீசார் நேற்று (நவ.,28) மறைமலையடிகள் சாலை பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு மது போதையில் ரகளை செய்த திண்டிவனம் பாண்டியன் என்பவர் மீதும் அய்யனார் கோவில் தெருவில் ரகளையில் ஈடுபட்ட தமிழக பகுதியை சேர்ந்த ரூபன்,30; என்பவர் மீதும் போலீசார் வழக்குப் பதிந்தனர்.

திருபுவனை போலீசார் நேற்று மதகடிப்பட்டு பகுதியில் ரோந்து சென்றனர். அங்குள்ள தனியார் பார் அருகில், குடிபோதையில் ரகளை செய்த விழுப்புரம் சரவணன்,27; என்பவர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us