ADDED : நவ 25, 2026 05:56 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: கோரிமேட்டில், தடை செய்யப்பட்ட நேரத்தில் வந்த லாரி டிரைவர் மீது போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்தனர்.
கோரிமேடு பகுதியில் வடக்கு போக்குவரத்து போலீசார் நேற்று (நவ.,24) வாகன சோதனை நடத்தினர். அப்போது, சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி லாரி (டி.என்.52.எச்.3346) ஒன்று தடை செய்யப்பட்ட நேரத்தில் அதிவேகமாகவும், அஜாக்கிரயாகவும் வந்தது.
இதையடுத்து, லாரியை ஓட்டி வந்த டிரைவர் திருச்சி மாவட்டம், நங்கநல்லுார் பகுதியை சேர்ந்த சக்திவேல்,43; என்பவர் மீது போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
