/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கதவை திருடியவர் மீது வழக்கு பதிவு
/
கதவை திருடியவர் மீது வழக்கு பதிவு
ADDED : அக் 20, 2024 04:25 AM
புதுச்சேரி: வீட்டு கதவை திருடியவர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
உப்பளம், நேதாஜி நகரை சேர்ந்தவர் உமா, 34. இவர், கடந்த பிப்ரவரி மாதம், வீட்டு கதவை திறந்து வைத்து விட்டு, அதே பகுதியில் உள்ள உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது, முன்பக்க கதவு காணாமல் போயிருந்தது.
வீட்டில் இருந்த சி.சி.டி.வி., காட்சியை பார்த்தபோது, அதே பகுதியை சேர்ந்த ரவி என்பவர் கதவை திருடி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து, அவர், முதலியார்பேட்டை போலீசில் புகார் அளித்தார். போலீசார் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தியதால், புதுச்சேரி நீதிமன்றத்தில், வழக்கு தொடுத்தார். வழக்கை விசாரித்த, நீதிமன்றம், கதவை திருடியர் மீது வழக்கு பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க போலீஸ் நிலையத்திற்கு உத்தரவிட்டது. அதனை அடுத்து, ரவி மீது முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.