/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
திருமண மண்டபம் யாருக்கு இரு தரப்பு மோதல்
/
திருமண மண்டபம் யாருக்கு இரு தரப்பு மோதல்
ADDED : ஜூலை 30, 2025 11:40 PM
அரியாங்குப்பம்: தனியார் திருமண மண்டபத்திற்கு உரிமை கொண்டாடுவது தொடர்பாக, ஏற்பட்ட தகராறில் இரு தரப்பை சேர்ந்தவர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.
புதுச்சேரி, காந்தி வீதியை சேர்ந்தவர் ஜெயபாலன். இவர், கடந்த 2022ம் ஆண்டு உடல் நலக்குறைவால் இறந்தார். இவருக்கு சொந்தமான திருமண மண்டபம் தவளக்குப்பத்தில் உள்ளது. ஜெயபாலனின் உறவினரான பிரிதிவிராஜன், 47, என்பவர் திருமண மண்டப நிர்வாகத்தை கவனித்து வந்தார்.
இதனிடையே ஜெயபாலனின் மனைவி கமலாக்குமாரி, திருமண மண்டபத்தை, தவளக்குப்பத்தை சேர்ந்த தங்கராசு என்பவரிடம் விற்றார். மண்டபத்தின் சொத்து தனக்கு உரிமை உள்ளதாக, பிரிதிவிராஜன், புதுச்சேரி கோர்டில் வழக்கு தொடுத்தார். கோர்டில் வழக்கு நடந்து வருகிறது.
இந்நிலையில், தங்கராசு தரப்பு மற்றும் பிரதிவிராஜன் தரப்பினருக்கும் இடையே நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்டு, தாக்கி கொண்டனர். இதுகுறித்து, தங்கராசு, பிரிதிவிராஜன் ஆகியோர் கொடுத்த புகார்களின் பேரில், தவளக்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் ஜெயகுருநாதன் தனித்தனியே வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.

